Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thittiye Nagaithu Sevakar Kaadi - திட்டியே நகைத்து சேவகர் காடி-

சரணங்கள்

1. திட்டியே நகைத்து சேவகர் காடி
தேடியோர் நொடியினில் கொணர்ந்து
எட்டிடாத் தூரத்தினில் அதை நீட்ட
இறைவனும் ருசித்திடா திருக்க

2. துட்டனா மிடது பாரிசக் கள்ளன்
துணிவு கொண்டையனை வைய
மற்றவனவனைக் கடிந்து பகர
வாயெடுத்தனன் அந்த நேரம்

3. குற்றமோ அணுவுமற்ற ஆண்டவன் மேல்
குறைசொல்ல அச்சமில்லையோ?
பட்டு நாம் தொலைக்கப் பல பாவம் புரிந்தோம்
பரிசுத்தன் யாதும் செய்திலரே

4. கிட்டி நான் ராச்சியந்தனில் வரும்போது
கிருபையாய் நினைத்தருளு மென்றான்
மட்டிலாப் பரதீஸ் வாழ்வையும் அளித்தார்
மாசில்லா யேசு நாயகனே

5. வலது பாரிசத்துக் கள்ளனுக் கன்பாய்
வாக்குறைத்த வல்ல பரனே
நிலைவரமான ஆவியை ஈந்து
நின்னுடன் இருப்பமெக் களிப்பாய்

6. நிலையில்லா உலகை சதமென்று திரிந்து
நின்னையும் பரத்தையும் மறந்து
அலைகடல் துரும்பின் கதியடையாது
ஆட்கொள்வாய் யேசு நாயகனே

திட்டியே நகைத்து சேவகர் காடி- Thittiye Nagaithu Sevakar Kaadi Lyrics in English

Saranangal 1. Thittiyae nakaiththu sevakar kaati thaetiyor notiyinil konarnthu ettidaath thooraththinil athai neetta iraivanum rusiththidaa thirukka 2. Thuttanaa midathu paarisak kallan thunnivu konntaiyanai vaiya mattavanavanaik katinthu pakara vaayeduththanan antha naeram 3. Kuttamo anuvumatta aanndavan mael kuraisolla achchamillaiyo? Pattu naam tholaikkap pala paavam purinthom Parisuththan yaathum seythilarae 4. Kitti naan raachchiyanthanil varumpothu kirupaiyaay ninaiththarulu mentan mattilaap parathees vaalvaiyum aliththaar maasillaa yaesu naayakanae 5. Valathu paarisaththuk kallanuk kanpaay vaakkuraiththa valla paranae nilaivaramaana aaviyai eenthu ninnudan iruppamek kalippaay 6. Nilaiyillaa ulakai sathamentu thirinthu ninnaiyum paraththaiyum maranthu alaikadal thurumpin kathiyataiyaathu aatkolvaay yaesu naayakanae

PowerPoint Presentation Slides for the song திட்டியே நகைத்து சேவகர் காடி- Thittiye Nagaithu Sevakar Kaadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thittiye Nagaithu Sevakar Kaadi – திட்டியே நகைத்து சேவகர் காடி- PPT
Thittiye Nagaithu Sevakar Kaadi PPT

யேசு நாயகனே சரணங்கள் திட்டியே நகைத்து சேவகர் காடி தேடியோர் நொடியினில் கொணர்ந்து எட்டிடாத் தூரத்தினில் நீட்ட இறைவனும் ருசித்திடா திருக்க துட்டனா மிடது பாரிசக் தமிழ்