Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thirumariyin Mozhikalilae - திருமறையின் மொழிகளிலே

திருமறையின் மொழிகளிலே தேன் வழியும் அதன்
அருள் நிறைந்த உரைகளினால் தீங்கழியும்

சரணங்கள்

1. அறுபத்து ஆறாகும் அதன் மணிகள் – அவை
அழியாத அமுதூறும் சுவை கனிகள்
ஒருமித்த நோக்கொன்றே அவை காட்டும் இந்த
உலகோருக் கென்றென்றும் அருள் கூட்டும்

2. இறைமைந்தர் இயேசுவையே எடுத்துரைக்கும் – அதன்
ஏடுகளில் அவர் பெயரே எதிரொலிக்கும்
நிறைவேறும் பாங்கிலவர் வாழ்வடங்கும் அதில்
நிகழ்கால வரலாற்றில் பொருள் விளங்கும்

3. ஆவியினால் நிறைந்தோராம் அடியார்கள் அதை
அவர் காலச் சூழலிலே வரைந்தார்கள்
பூவுலகின் சூழல்களில் மறைபேசும் என்றும்
புது நெறியின் தீபமதாய் ஒளிவீசும்

4. முறையாகத் திருமறையைப் பயின்றிடுவோம் அதன்
முழுப்பொருளை அறிந்திடவே முயன்றிடுவோம்
நிறைவான வாழ்வதனை அடைந்திடவே – மறை
நிழல்படியும் பாதையிலே நடந்திடுவோம்

திருமறையின் மொழிகளிலே – Thirumariyin Mozhikalilae Lyrics in English

Thirumaraiyin molikalilae thaen valiyum athan arul niraintha uraikalinaal theengaliyum saranangal 1. Araுpaththu aaraakum athan mannikal – avai aliyaatha amuthooraுm suvai kanikal orumiththa Nnokkonte avai kaattum intha ulakoruk kententum arul koottum 2. Iraimainthar Yesuvaiyae eduththuraikkum – athan aedukalil avar peyarae ethirolikkum niraivaeraுm paangilavar vaalvadangum athil nikalkaala varalaattil porul vilangum 3. Aaviyinaal nirainthoraam atiyaarkal athai avar kaalach soolalilae varainthaarkal poovulakin soolalkalil maraipaesum entum puthu neriyin theepamathaay oliveesum 4. Muraiyaakath thirumaraiyaip payintiduvom athan mulupporulai arinthidavae muyantiduvom niraivaana vaalvathanai atainthidavae – marai nilalpatiyum paathaiyilae nadanthiduvom

PowerPoint Presentation Slides for the song திருமறையின் மொழிகளிலே – Thirumariyin Mozhikalilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirumariyin Mozhikalilae – திருமறையின் மொழிகளிலே PPT
Thirumariyin Mozhikalilae PPT

அருள் திருமறையின் மொழிகளிலே தேன் வழியும் நிறைந்த உரைகளினால் தீங்கழியும் சரணங்கள் அறுபத்து ஆறாகும் மணிகள் அழியாத அமுதூறும் சுவை கனிகள் ஒருமித்த நோக்கொன்றே காட்டும் தமிழ்