Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tharunam Ithil Yesuparanae - தருணம் இதில் யேசுபரனே

பல்லவி

தருணம் இதில் யேசுபரனே!-உமதாவி
தரவேணும் சுவாமீ!

அனுபல்லவி

அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவி
அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. – தருணம்

சரணங்கள்

1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்
மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்,
சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்
சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. – தருணம்

2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்
பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்,
சாவுற்றோர்களை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும்
மா வீரராய் விளங்க வல்லாவியே இறங்க. – தருணம்

3. ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களை
அனுதினமும் இவர் அணிகல மாயணிந்து,
மேவும் திருமந்தையை மேய்த்து வளர்க்க நல்ல
மேய்ப்பரே, அன்பின் ஆவி வாய்ப்பாய் இவரில் தங்க. – தருணம்

4. ஏக்கம் ஆத்தும தாகம் இடைவிடாமல் அடைந்து
ஊக்கத்துடனே இவர் ஓயாமல் ஜெபித்திட,
வாக்குக் கடங்காப் பெருமூச்சோடே எமக்காக
மன்றாடும் ஜெப ஆவி என்றென்றும் நிரம்பிட. – தருணம்

5. மாசுகளற உம்மில் வாசமாக நிலைத்து
மாபணிவாய் உந்தம் மகிமையை நிதம் தேடத்,
தேசுறு அருள்நாதா, தாசர் உள்ளத்தினின்று
ஜீவநதிகள் ஓடிச் செல்வம் பொழியச் செய்ய. – தருணம்

Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே Lyrics in English

Pallavi tharunam ithil yaesuparanae!-umathaavi tharavaenum suvaamee! Anupallavi arultharum sathya valla, anpin jepaththin aavi apishaekam peraுmuntan atiyarmael amarnthida. – tharunam saranangal 1. Vinthai njaanam arivu vaetha saththiyangalil mikka uyarnthu thaernthu vinnnnoli ivar veesach, sathyam sakalath thullum thaasarkalai nadaththum sathya aavi ivarmael sampooranamaayp peyya. – tharunam 2. Paavaththai vaeraraுkkum aaviyin vaalpitiththup palamaakavae ivar ulakinil por seyyach, saavuttaோrkalai nithya jeevanaip perach seyyum maa veeraraay vilanga vallaaviyae iranga. – tharunam 3. Aaviyin kaniyennum anpaathi kunangalai anuthinamum ivar annikala maayanninthu, maevum thirumanthaiyai maeyththu valarkka nalla maeypparae, anpin aavi vaayppaay ivaril thanga. – tharunam 4. Aekkam aaththuma thaakam itaividaamal atainthu ookkaththudanae ivar oyaamal jepiththida, vaakkuk kadangaap perumoochchotae emakkaaka mantadum jepa aavi ententum nirampida. – tharunam 5. Maasukalara ummil vaasamaaka nilaiththu maapannivaay untham makimaiyai nitham thaedath, thaesuraு arulnaathaa, thaasar ullaththinintu jeevanathikal otich selvam poliyach seyya. – tharunam

PowerPoint Presentation Slides for the song Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே PPT
Tharunam Ithil Yesuparanae PPT

தருணம் ஆவி சத்ய அன்பின் ஆவியின் பல்லவி யேசுபரனேஉமதாவி தரவேணும் சுவாமீ அனுபல்லவி அருள்தரும் வல்ல ஜெபத்தின் அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட சரணங்கள் விந்தை தமிழ்