Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thani Maanthan Desathaarum - தனி மாந்தன் தேசத்தாரும்

1. தனி மாந்தன் தேசத்தாரும்,
நீதிப் போரில் சேர்ந்துமே
நன்மை நாட்ட தீமை ஓய்க்க
ஓர் தருணம் நேருமே;
ஸ்வாமி ஆட்சி, மேசியாவை
ஏற்று அன்றேல் தள்ளியே
தீமை நன்மை ஒன்றைத் தேர்ந்து
ஆயுள்காலம் ஓடுமே.

2. சத்திய நெறி மா கடினம்
பயன் பேரும் அற்றதாம்
சித்தி எய்தாதாயினுமே
நீதியே மேலானதாம்
நீதி வீரன் நீதி பற்ற
கோழை நிற்பான் தூரமே
நீதி பற்றார் யாரும் ஓர்நாள்
நிற்பர் நீதி பற்றியே.

3. வீர பக்தர் வாழ்க்கை நோக்கி
கர்த்தா, உம்மைப் பின்செல்வோம்
கோர நோவு நிந்தை சாவு
சிலுவையும் சகிப்போம்
காலந்தோறும் கிறிஸ்து வாழ்க்கை
புதிதாய் விளங்குமே
மேலும் முன்னும் ஏறவேண்டும்
சத்திய பாதை செல்வோரே.

4. தீமை கிரீடம் சூடி வாழ்ந்தும்,
சத்தியம் நிலைத்தோங்கிடும்
வாய்மை வீரன் தூக்குமேடை
தீ வாள்வாய்ப் படுகினும்
வீரன் அவன், லோகம் ஆள்வான்
நீதி வாழ்க்கை வெல்லுமே
சாரும் பக்தனையே நாதர்
காப்பார் காணா நின்றுமே.

வீரன் அவன், லோகம் ஆள்வான்
நீதி வாழ்க்கை வெல்லுமே
சாரும் பக்தனையே நாதர்
காப்பார் காணா நின்றுமே.

Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும் Lyrics in English

1. Thani maanthan thaesaththaarum, neethip poril sernthumae nanmai naatta theemai oykka or tharunam naerumae; svaami aatchi, maesiyaavai aettaு antel thalliyae theemai nanmai ontaith thaernthu aayulkaalam odumae. 2. Saththiya neri maa katinam payan paerum attathaam siththi eythaathaayinumae neethiyae maelaanathaam neethi veeran neethi patta kolai nirpaan thooramae neethi pattaாr yaarum ornaal nirpar neethi pattiyae. 3. Veera pakthar vaalkkai Nnokki karththaa, ummaip pinselvom kora Nnovu ninthai saavu siluvaiyum sakippom kaalanthoraுm Kristhu vaalkkai puthithaay vilangumae maelum munnum aeravaenndum saththiya paathai selvorae. 4. Theemai kireedam sooti vaalnthum, saththiyam nilaiththongidum vaaymai veeran thookkumaetai thee vaalvaayp padukinum veeran avan, lokam aalvaan neethi vaalkkai vellumae saarum pakthanaiyae naathar kaappaar kaannaa nintumae. Veeran avan, lokam aalvaan neethi vaalkkai vellumae saarum pakthanaiyae naathar kaappaar kaannaa nintumae.

PowerPoint Presentation Slides for the song Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thani Maanthan Desathaarum – தனி மாந்தன் தேசத்தாரும் PPT
Thani Maanthan Desathaarum PPT

நீதி வீரன் வாழ்க்கை தீமை நன்மை சத்திய லோகம் ஆள்வான் வெல்லுமே சாரும் பக்தனையே நாதர் காப்பார் காணா நின்றுமே தனி மாந்தன் தேசத்தாரும் நீதிப் தமிழ்