தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
தண்ணீரில்லா நிலம்போல
தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்
1. ஒவ்வொரு நாளும் உம்பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்
2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்
3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்
4. வாழ் நாளெல்லாம் உம்நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்
5. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கிக் கொண்டது
Thaevanae En Thaevaa PowerPoint
Thaevanae En Thaevaa - தேவனே என் தேவா Lyrics
Thaevanae En Thaevaa PPT
Download Thaevanae En Thaevaa Tamil PPT