பல்லவி
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!
துதிமிகு தேவா ஸ்தோத்திரமே!
அனுபல்லவி
நேத்திரம்போல் கடந்தாண்டிலெமை
காத்தீர் கருணையால் நிதம் உண்மை! – ஸ்தோத்
சரணங்கள்
1. எத்தனை ஆபத்து சோதனைகள்
எமக்கு நேரிட்ட பல இடர்கள்
அத்தனையும் எமை அணுகாமல்
ஆதரித்தீர் பிழை நினையாமல்! – ஸ்தோத்
2. ஆனந்தத்துடன் புது வருடம்
ஆரம்பித்தோம் ஆவலுடன்
நானிலம் புரக்க அவதரித்த
நாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – ஸ்தோத்
3. இப்புது ஆண்டினில் அடியார்க்கு
இகபர நன்மைகள் அனுக்கிரகித்து;
அப்பனே கிருபையின் செட்டையினுள்
அற்புதமா யணைத் தாதரிப்பாய் – ஸ்தோத்
4. வெற்றியாய் யுத்தத்தில் முன்செல்ல
வெகுவாய் ஆத்ம ஜெயங்கள் கொள்ள;
பற்றியே நடந்துனின் பாதை செல்ல
பகருவாய் உன்னத வரங்கள் செல்ல – ஸ்தோத்
5. தேசங்கள் வாழியே தீமையற
தேவனைத் தேடியே தோஷமற,
ஓசன்னா பாடவே ஓகையுற
உய்யவே அருள்வாய் ஊழியற – ஸ்தோத்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae Lyrics in English
Pallavi Sthoththiram Sthoththiram sthoththiramae! Thuthimiku thaevaa sthoththiramae! Anupallavi naeththirampol kadanthaanntilemai kaaththeer karunnaiyaal nitham unnmai! – sthoth saranangal 1. Eththanai aapaththu sothanaikal emakku naeritta pala idarkal aththanaiyum emai anukaamal aathariththeer pilai ninaiyaamal! – sthoth 2. Aananthaththudan puthu varudam aarampiththom aavaludan naanilam purakka avathariththa naathanaip pukalvom nantiyudan – sthoth 3. Ipputhu aanntinil atiyaarkku ikapara nanmaikal anukkirakiththu; appanae kirupaiyin settaைyinul arputhamaa yannaith thaatharippaay – sthoth 4. Vettiyaay yuththaththil munsella vekuvaay aathma jeyangal kolla; pattiyae nadanthunin paathai sella pakaruvaay unnatha varangal sella – sthoth 5. Thaesangal vaaliyae theemaiyara thaevanaith thaetiyae thoshamara, Hosanna paadavae okaiyura uyyavae arulvaay ooliyara – sthoth
PowerPoint Presentation Slides for the song ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothiram Sthothiram Sthothiramae – ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே PPT
Sthothiram Sthothiram Sthothiramae PPT

