சிறியவனை தூக்கி எடுப்பீரே
எளியவனை உயர்த்தி வைப்பீரே
ஏழையை கைவிட மாட்டீரே
எளியவனை மேன்மை படுத்திடுவீர்
தேவா உம் செயல்கள் ஆச்சரியமே
என் பார்வையில் அதிசயங்கள் (2)
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் (2)
தனிமையில் எந்தன் ஆறுதலே
என் நெருக்கத்தில் எந்தன் தஞ்சமானீர்
என் தொய்வினில் எந்தன் பெலனானீரே
என் தோல்வியில் எனக்கு ஜெயம் தந்தீரே
என் ஏக்கங்கள் யாவும் அறிந்திடுவீர்
என் வியாகுலம் உமக்கு புரிந்திடுமே
என் நினைவுகள் நீர் பார்க்கின்றீரே
என் காயங்கள் யாவும் ஆற்றிடுவீர்
என் காலங்கள் உங்க கரத்தினிலே
என் கண்ணீரை துருத்தியில் வைத்தீரே
என் வேண்டுதல் யாவும் கேட்டிடுவீர்
உம் மகிமையால் என்னை உயர்த்திடுவீர்
Siriyavanai Thookki Eduppeere Lyrics in English
Siriyavanai thookki eduppeerae eliyavanai uyarththi vaippeerae aelaiyai kaivida maattirae eliyavanai maenmai paduththiduveer thaevaa um seyalkal aachchariyamae en paarvaiyil athisayangal (2) aaraathippaen ummaiyae aaraathippaen (2) thanimaiyil enthan aaraுthalae en nerukkaththil enthan thanjamaaneer en thoyvinil enthan pelanaaneerae en tholviyil enakku jeyam thantheerae en aekkangal yaavum arinthiduveer en viyaakulam umakku purinthidumae en ninaivukal neer paarkkinteerae en kaayangal yaavum aattiduveer en kaalangal unga karaththinilae en kannnneerai thuruththiyil vaiththeerae en vaennduthal yaavum kaetdiduveer um makimaiyaal ennai uyarththiduveer
PowerPoint Presentation Slides for the song Siriyavanai Thookki Eduppeere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siriyavanai thookki eduppeere – சிறியவனை தூக்கி எடுப்பீரே PPT
Siriyavanai thookki eduppeere PPT

