Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Naadar Yesuvin - சிலுவை நாதர் இயேசுவின்

சிலுவை நாதர் இயேசுவின்
பேரொளி வீசிடும் தூய கண்கள்
என்னை நோக்கிப் பார்க்கின்றன – தம்
காயங்களையும் பார்க்கின்றன

1. என் கைகள் பாவங்கள் செய்திட்டால்
தம் கையின் காயங்கள் பார்க்கின்றாரே
தீயவழியில் என் கால்கள் சென்றதால்
தம் காலின் காயங்கள் பார்க்கின்றாரே

2. தீட்டுள்ள எண்ணம் இதயம் கொண்டால்
ஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்குகின்றார்
வீண் பெருமை என்னில் இடம் பெற்றால்
முள்முடி பார்த்திட ஏங்குகின்றார்

3. திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்
வருந்திடா பிள்ளைக்காய்க் கலங்குகின்றார்
தம் கண்ணீர் காயத்தில் விழுந்திட
கண்ணீரும், இரத்தமும் சிந்துகின்றார்

4. அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்
அவர் கண்ணீர் என்னை மெருகேற்றிடும்
கலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்
கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன்

Siluvai Naadar Yesuvin Lyrics in English

Siluvai naathar Yesuvin paeroli veesidum thooya kannkal ennai Nnokkip paarkkintana – tham kaayangalaiyum paarkkintana 1. En kaikal paavangal seythittal tham kaiyin kaayangal paarkkintarae theeyavaliyil en kaalkal sentathaal tham kaalin kaayangal paarkkintarae 2. Theettulla ennnam ithayam konndaal eetti paayntha nenjai Nnokkukintar veenn perumai ennil idam pettaாl mulmuti paarththida aengukintar 3. Thirunthidaa paavikkaay alukintar varunthidaa pillaikkaayk kalangukintar tham kannnneer kaayaththil vilunthida kannnneerum, iraththamum sinthukintar 4. Avar iraththam en paavam kaluvidum avar kannnneer ennai merukaettidum kalangarai vilakkaaka oli veesuvaen kalanguvorai avar manthai serppaen

PowerPoint Presentation Slides for the song Siluvai Naadar Yesuvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Naadar Yesuvin – சிலுவை நாதர் இயேசுவின் PPT
Siluvai Naadar Yesuvin PPT

தம் என்னை பார்க்கின்றன காயங்கள் பார்க்கின்றாரே கண்ணீர் சிலுவை நாதர் இயேசுவின் பேரொளி வீசிடும் தூய கண்கள் நோக்கிப் காயங்களையும் கைகள் பாவங்கள் செய்திட்டால் கையின் தமிழ்