Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siluvai Kodi Mun Sella - சிலுவைக் கொடி

1 சிலுவைக் கொடி முன்செல்ல
செல்வார் நம் வேந்தர் போர் செய்ய;
நம் ஜீவன் ஆனோர் மாண்டனர்;
தம் சாவால் ஜீவன் தந்தனர்.

2 மெய்ச் சத்தியம் நாட்டப் பாடுற்றார்,
நல் வாலிபத்தில் மரித்தார்;
நம் மீட்பர் ரத்தம் பீறிற்றே,
நம் நெஞ்சம் தூய்மை ஆயிற்றே.

3 முன்னுரை நிறைவேறிற்றே;
மன்னர்தம் கொடி ஏற்றுமே;
பலக்கும் அன்பின் வல்லமை
சிலுவை வேந்தர் ஆளுகை.

4 வென்றிடும் அன்பின் மரமே!
வெல் வேந்தர் செங்கோல் சின்னமே!
உன் நிந்தை மாட்சி ஆயிற்றே,
மன்னர் உம்மீது ஆண்டாரே.

5 உன்னில் ஓர் நாளில் ஆண்டவர்
மன்னுயிர் சாபம் போக்கினர்;
ஒப்பற்ற செல்வம் தம்மையே
ஒப்பித்து மீட்டார் எம்மையே.

Siluvai kodi mun sella – சிலுவைக் கொடி

Siluvai Kodi Mun Sella – சிலுவைக் கொடி Lyrics in English

1 siluvaik koti munsella selvaar nam vaenthar por seyya; nam jeevan aanor maanndanar; tham saavaal jeevan thanthanar. 2 meych saththiyam naattap paaduttaாr, nal vaalipaththil mariththaar; nam meetpar raththam peeritte, nam nenjam thooymai aayitte. 3 munnurai niraivaeritte; mannartham koti aettaுmae; palakkum anpin vallamai siluvai vaenthar aalukai. 4 ventidum anpin maramae! Vel vaenthar sengaோl sinnamae! Un ninthai maatchi aayitte, mannar ummeethu aanndaarae. 5 unnil or naalil aanndavar mannuyir saapam pokkinar; oppatta selvam thammaiyae oppiththu meettar emmaiyae. Siluvai kodi mun sella – siluvaik koti

PowerPoint Presentation Slides for the song Siluvai Kodi Mun Sella – சிலுவைக் கொடி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Kodi Mun Sella – சிலுவைக் கொடி PPT
Siluvai Kodi Mun Sella PPT

நம் கொடி வேந்தர் சிலுவைக் ஜீவன் ஆயிற்றே அன்பின் முன்செல்ல செல்வார் போர் செய்ய ஆனோர் மாண்டனர் தம் சாவால் தந்தனர் மெய்ச் சத்தியம் நாட்டப் தமிழ்