சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்
எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்
1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும் — சத்திய
2. பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதனின் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும் — சத்திய
3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார் — சத்திய
4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும் — சத்திய
5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன் மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே — சத்திய
6. வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும் — சத்திய
Saththiya Vaetham Paktharin Geetham Lyrics in English
Saththiya vaetham paktharin geetham suththarkal pokum paathaiyin theepam uththama maarkkam kaattum eththanai thunpam thuyaram vanthum pakthanaith thaettidum oushatham 1. Niththam virumpum Karththar vasanam suththam pasumpon thelinthidum thaen ithayam makilum kannkal theliyum irunnda aathmaa uyirataiyum — saththiya 2. Paethaikalidam njaanam arulum vaetha puththakam maenmai tharum iravum pakalum ithanin thiyaanam inimai thangum thanimaiyilum — saththiya 3. Vaethap piriyar thaeva puthalvar sethamataiyaa nadanthiduvaar ilaikal uthiraa marangal pola ivarkal nalla kani tharuvaar — saththiya 4. Ullam uthikkum uraுthi alikkum kallang kapadellaam akattaுm katinthuk kollum karaikal pokkum kanamataiya vali nadaththum — saththiya 5. Karththar vasanam valla sammatti kan malaiyaiyum noraுkkidumae ithaya ninaivai vakaiyaay araுkkum iru puramum karukkullathae — saththiya 6. Vaanam akalum poomi aliyum vaetha vasanam nilaiththirukkum paraman vaetham enathu selvam paravasam nitham arulum — saththiya
PowerPoint Presentation Slides for the song Saththiya Vaetham Paktharin Geetham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saththiya Vaetham Paktharin Geetham – சத்திய வேதம் பக்தரின் கீதம் PPT
Saththiya Vaetham Paktharin Geetham PPT

