Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sathiya Vedam Baktharin Geetham - சத்திய வேதம் பக்தரின் கீதம்

சத்திய வேதம் பக்தரின் கீதம்
சுத்தர்கள் போகும் பாதையின் தீபம்
உத்தம மார்க்கம் காட்டும்

அனுபல்லவி

எத்தனை துன்பம் துயரம் வந்தும்
பக்தனைத் தேற்றிடும் ஔஷதம்

சரணங்கள்

1. நித்தம் விரும்பும் கர்த்தர் வசனம்
சுத்தம் பசும்பொன் தெளிந்திடும் தேன்
இதயம் மகிழும் கண்கள் தெளியும்
இருண்ட ஆத்மா உயிரடையும்

2. பேதைகளிடம் ஞானம் அருளும்
வேத புத்தகம் மேன்மை தரும்
இரவும் பகலும் இதன் தியானம்
இனிமை தங்கும் தனிமையிலும்

3. வேதப் பிரியர் தேவ புதல்வர்
சேதமடையா நடந்திடுவார்
இலைகள் உதிரா மரங்கள் போல
இவர்கள் நல்ல கனி தருவார்

4. உள்ளம் உதிக்கும் உறுதி அளிக்கும்
கள்ளங் கபடெல்லாம் அகற்றும்
கடிந்துக் கொள்ளும் கறைகள் போக்கும்
கனமடைய வழி நடத்தும்

5. கர்த்தர் வசனம் வல்ல சம்மட்டி
கன் மலையையும் நொறுக்கிடுமே
இதய நினைவை வகையாய் அறுக்கும்
இரு புறமும் கருக்குள்ளதே

6. வானம் அகலும் பூமி அழியும்
வேத வசனம் நிலைத்திருக்கும்
பரமன் வேதம் எனது செல்வம்
பரவசம் நிதம் அருளும்

Sathiya Vedam Baktharin Geetham – சத்திய வேதம் பக்தரின் கீதம் Lyrics in English

saththiya vaetham paktharin geetham
suththarkal pokum paathaiyin theepam
uththama maarkkam kaattum

anupallavi

eththanai thunpam thuyaram vanthum
pakthanaith thaettidum oushatham

saranangal

1. niththam virumpum karththar vasanam
suththam pasumpon thelinthidum thaen
ithayam makilum kannkal theliyum
irunnda aathmaa uyirataiyum

2. paethaikalidam njaanam arulum
vaetha puththakam maenmai tharum
iravum pakalum ithan thiyaanam
inimai thangum thanimaiyilum

3. vaethap piriyar thaeva puthalvar
sethamataiyaa nadanthiduvaar
ilaikal uthiraa marangal pola
ivarkal nalla kani tharuvaar

4. ullam uthikkum uruthi alikkum
kallang kapadellaam akattum
katinthuk kollum karaikal pokkum
kanamataiya vali nadaththum

5. karththar vasanam valla sammatti
kan malaiyaiyum norukkidumae
ithaya ninaivai vakaiyaay arukkum
iru puramum karukkullathae

6. vaanam akalum poomi aliyum
vaetha vasanam nilaiththirukkum
paraman vaetham enathu selvam
paravasam nitham arulum

PowerPoint Presentation Slides for the song Sathiya Vedam Baktharin Geetham – சத்திய வேதம் பக்தரின் கீதம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sathiya Vedam Baktharin Geetham – சத்திய வேதம் பக்தரின் கீதம் PPT
Sathiya Vedam Baktharin Geetham PPT

தமிழ்