Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Appa pithave appa pithave - உம்மைப் போல யாரும் இல்லை

உம்மைப் போல யாரும் இல்லை
உந்தன் அன்புக்குஈடே இல்ல
நீர் என்னோடு இருப்பதினாலே
உலகில் எந்த பயமும் இல்லை -2

அப்பா பிதாவே அப்பா பிதாவே
அப்பா பிதாவே அன்பு நேசரே
ஆயுள் முழுதும் கூட
இருக்கும் ஆத்தும நேசரே -2

உன்னதத்தில் உயர்ந்தவரே
உலகையாளும் இரட்சகரே
என்னை மீட்க வந்தவரே
என் அன்பு நேசரே -2
காலைதோறும் கிருபைகளால்
என்னை என்றும் நடத்துகிறீர்
கழுகு போல செட்டைகளால்
நித்தம் என்னை சுமக்கின்றீர் -2

ஏழை என்னை நினைத்தவரே
என் கரத்தை பிடித்தவரே
எதிரி கைகள் ஓங்கும் முன்னே
எனக்காய் யுத்தம் செய்தவரே -2
ஏழு மடங்கு அக்கினியோ
எதிர் வீசும் பெருங்காற்றோ
எதுவும் என்னை அணுகாமல்
எப்போதும் காத்தவரே -2

பிரயாணத்தில் மேடுகளும்
வழிநெடுகே பள்ளங்களும்
சோர்ந்துப்போக செய்தாலும்
பெலனடைய செய்தவரே -2
தடைகளெல்லாம் தகர்ப்பவரே
தாகம் தீர்க்கும் கன்மலையே
பாதம் கல்லில் இடறாமல்
பாதுகாத்த பரிசுத்தரே -2

நம்பி வந்த யாவருக்கும்
நன்மை செய்யும் நாயகரே
தேடி வந்த யாவரையும்
வாழ வைக்கும் வல்லவரே -2
துன்பங்களைக் கண்டோரை
துதித்து பாட செய்பவரே
மகிழ்ச்சி என்னும் மகுடத்தினால்
மகிமையாக்கி வைப்பவரே -2

கொன்று போட வந்தோரை
கொள்ளையாட செய்தவரே
கலங்கி நின்ற நேரங்களை
களிப்பாக்கி தந்தீரே -2
பறந்து காக்கும் பட்சியை போல்
என்னைக் காத்த இரட்சகரே
சுற்றி வந்த சேனைகளை
சுவாசமின்றி செய்தீரே -2

Raja – Appa pithave appa pithave Lyrics in English

ummaip pola yaarum illai
unthan anpukkueetae illa
neer ennodu iruppathinaalae
ulakil entha payamum illai -2

appaa pithaavae appaa pithaavae
appaa pithaavae anpu naesarae
aayul muluthum kooda
irukkum aaththuma naesarae -2

unnathaththil uyarnthavarae
ulakaiyaalum iratchakarae
ennai meetka vanthavarae
en anpu naesarae -2
kaalaithorum kirupaikalaal
ennai entum nadaththukireer
kaluku pola settaைkalaal
niththam ennai sumakkinteer -2

aelai ennai ninaiththavarae
en karaththai pitiththavarae
ethiri kaikal ongum munnae
enakkaay yuththam seythavarae -2
aelu madangu akkiniyo
ethir veesum perungaattaோ
ethuvum ennai anukaamal
eppothum kaaththavarae -2

pirayaanaththil maedukalum
valinedukae pallangalum
sornthuppoka seythaalum
pelanataiya seythavarae -2
thataikalellaam thakarppavarae
thaakam theerkkum kanmalaiyae
paatham kallil idaraamal
paathukaaththa parisuththarae -2

nampi vantha yaavarukkum
nanmai seyyum naayakarae
thaeti vantha yaavaraiyum
vaala vaikkum vallavarae -2
thunpangalaik kanntoorai
thuthiththu paada seypavarae
makilchchi ennum makudaththinaal
makimaiyaakki vaippavarae -2

kontu poda vanthorai
kollaiyaada seythavarae
kalangi ninta naerangalai
kalippaakki thantheerae -2
paranthu kaakkum patchiyai pol
ennaik kaaththa iratchakarae
sutti vantha senaikalai
suvaasaminti seytheerae -2

PowerPoint Presentation Slides for the song Raja – Appa pithave appa pithave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa pithave appa pithave – உம்மைப் போல யாரும் இல்லை PPT
Appa pithave appa pithave PPT

என்னை அப்பா பிதாவே நேசரே செய்தவரே இல்லை அன்பு இரட்சகரே உம்மைப் யாரும் உந்தன் அன்புக்குஈடே இல்ல நீர் என்னோடு இருப்பதினாலே உலகில் பயமும் ஆயுள் தமிழ்