Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Pottri Thuthi Pugalnthu Thuthi - போற்றித் துதி புகழ்ந்து துதி

பல்லவி

போற்றித் துதி புகழ்ந்து துதி – உந்தன்
பரிசுத்த நாயகனை ஏற்றித் துதி

சரணங்கள்

1. தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் – இந்தத்
தரணிதனில் போகவிட்டார் மானிடர்க்காய்
கன்ம வினையெல்லாம் தீர்க்க வந்தார் – பொல்லாக்
கருமங்கள் யாவையும் போக்க வந்தார் – போற்றி

2. தீராத விஷமெல்லாம் தீர்க்க வந்தார் – நாம்
தீயி லகப்படாமல் தூக்க வந்தார்;
பாவத்தில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் – நித்திய
பாதாளத்தில் போவோரைத் தப்புவிப்பார் – போற்றி

3. பொல்லாத உலகத்தின் மாய்கையாலே – சாத்தான்
போதிக்கிறான் உன்னை வாதிக்கிறான்
நில்லாதே பாவி நீ நில்லாதே – அங்கே
நிற்கும் அந்தப் பாதை தான் பொல்லாததே – போற்றி

4. மேலான இரட்சிப்பை கூறுகின்ற – இந்த
மேன்மையுள்ள இரட்சகரைப் பாராயோ,
வாராயோ பாவி நீ கேளாயோ? இப்போ
பராபரனை வந்து சரண் அடையாயோ? – போற்றி

Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி Lyrics in English

Pallavi pottith thuthi pukalnthu thuthi – unthan Parisuththa naayakanai aettith thuthi saranangal 1. Thanthaar Yesu suthanai engalukkaay – inthath tharannithanil pokavittar maanidarkkaay kanma vinaiyellaam theerkka vanthaar – pollaak karumangal yaavaiyum pokka vanthaar – potti 2. Theeraatha vishamellaam theerkka vanthaar – naam theeyi lakappadaamal thookka vanthaar; paavaththil mariththorai uyirppippaar – niththiya paathaalaththil povoraith thappuvippaar – potti 3. Pollaatha ulakaththin maaykaiyaalae – saaththaan pothikkiraan unnai vaathikkiraan nillaathae paavi nee nillaathae – angae nirkum anthap paathai thaan pollaathathae – potti 4. Maelaana iratchippai kooraுkinta – intha maenmaiyulla iratchakaraip paaraayo, vaaraayo paavi nee kaelaayo? Ippo paraaparanai vanthu sarann ataiyaayo? – potti

PowerPoint Presentation Slides for the song Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pottri Thuthi Pugalnthu Thuthi – போற்றித் துதி புகழ்ந்து துதி PPT
Pottri Thuthi Pugalnthu Thuthi PPT

வந்தார் போற்றி துதி தீர்க்க நில்லாதே பாவி பல்லவி போற்றித் புகழ்ந்து உந்தன் பரிசுத்த நாயகனை ஏற்றித் சரணங்கள் தந்தார் இயேசு சுதனை எங்களுக்காய் தரணிதனில் தமிழ்