Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால்
1. பிதாவே ஞானம் அன்பினால்
அனைத்தையும் படைத்தீர்;
ஏதேனிலே விவாகத்தால்
ஆண் பெண்ணையும் இணைத்தீர்
அப்பூர்வ ஆசீர்வாதத்தை,
இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை
இவர்களுக்கும் ஈயும்.
2. கானா ஊர் விருந்தாளியே,
இங்கே ப்ரசன்னமாகும்;
உம்தன் சம்பூரணத்தாலே
குறைவை நிறைவாக்கும்;
இவர்கள் இக இன்பமே
பரத்தின் பாக்கியமாகவே
நீர் மாறும்படி செய்யும்.
3. புனித ஆவி தேவரீர்
இவர்கள் மேலே ஊதும்;
உம் தூய்மை அன்பினாலும் நீர்
இவர்களைத் தற்காரும்;
எப்பாவத்துக்கும் நீங்கியே,
ஒரே சரீரம் போலவே
இவர்கள் வாழச் செய்யும்.
4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,
ப்ரயாசம் வீணே ஆகும்;
நீர் ஆசீர்வதிக்காவிடில்
இன்பமும் துன்பமாகும்;
உம்மால் இணைக்கப்பட்டோரை
குன்றாத நேசமுள்ளோரை
யார்தான் பிரிக்கக்கூடும்?
Pithavae Gnanam Anbinaal – பிதாவே ஞானம் அன்பினால் Lyrics in English
Pithavae Gnanam Anbinaal Lyrics – pithaavae njaanam anpinaal 1. Pithaavae njaanam anpinaal anaiththaiyum pataiththeer; aethaenilae vivaakaththaal aann pennnnaiyum innaiththeer appoorva aaseervaathaththai, ilvaalkkaiyin nallinpaththai ivarkalukkum eeyum. 2. Kaanaa oor virunthaaliyae, ingae prasannamaakum; umthan sampooranaththaalae kuraivai niraivaakkum; ivarkal ika inpamae paraththin paakkiyamaakavae neer maaraுmpati seyyum. 3. Punitha aavi thaevareer ivarkal maelae oothum; um thooymai anpinaalum neer ivarkalaith tharkaarum; eppaavaththukkum neengiyae, orae sareeram polavae ivarkal vaalach seyyum. 4. Thriyaekaa neer kattavitil, prayaasam veennee aakum; neer aaseervathikkaavitil inpamum thunpamaakum; ummaal innaikkappattaோrai kuntatha naesamullorai yaarthaan pirikkakkoodum?
PowerPoint Presentation Slides for the song Pithavae Gnanam Anbinaal – பிதாவே ஞானம் அன்பினால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pithavae Gnanam Anbinaal – பிதாவே ஞானம் அன்பினால் PPT
Pithavae Gnanam Anbinaal PPT

