Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parisutha Paranae Thuthi Umakku - பரிசுத்த பரனே துதியுமக்கு

பல்லவி

பரிசுத்த பரனே துதியுமக்கு
பரலோகம் விட்டவரே துதியுமக்கு! (2)

சரணங்கள்

1. நரர் சிறை விடுக்க, சுரர் புகழ் வெறுத்த
திருமறை முடிவே, துதியுமக்கு
திருச்சித்தம் செய்ய நரரூபாய் வந்தவா
கருணையின் கடலே துதியுமக்கு – பரி

2. தலைதானும் வைக்க நிலையின்றித் திரிந்தாய்
நிலையே, நிதியே, துதியுமக்கு
கெத்சமனேயிலதி துயர் கொண்டாய்
அதிசய அன்பே துதியுமக்கு – பரி

3. அன்னாவின் மனையில் கன்னத்திலறைய
சின்னப்பட்டவரே துதியுமக்கு
முகத்தினில் துப்பி முதுகினிலடித்த
பகைவர்க்கு மன்னித்தாய், துதியுமக்கு – பரி

4. நெடுங்குருசேறி கடுந்துயர் கொண்டு
மடிந்த என் சிரசே, துதியுமக்கு
மரணத்தை வென்ற காரணத்தால் இந்த
தருணத்தில் மிகுந்த துதியுமக்கு – பரி

Parisutha Paranae Thuthi Umakku – பரிசுத்த பரனே துதியுமக்கு Lyrics in English

Pallavi Parisuththa paranae thuthiyumakku Paralokam vittavarae thuthiyumakku! (2) saranangal 1. Narar sirai vidukka, surar pukal veraுththa thirumarai mutivae, thuthiyumakku thiruchchiththam seyya nararoopaay vanthavaa karunnaiyin kadalae thuthiyumakku – pari 2. Thalaithaanum vaikka nilaiyintith thirinthaay nilaiyae, nithiyae, thuthiyumakku kethsamanaeyilathi thuyar konndaay athisaya anpae thuthiyumakku – pari 3. Annaavin manaiyil kannaththilaraiya sinnappattavarae thuthiyumakku mukaththinil thuppi muthukinilatiththa pakaivarkku manniththaay, thuthiyumakku – pari 4. Nedunguruseri kadunthuyar konndu matintha en sirase, thuthiyumakku maranaththai venta kaaranaththaal intha tharunaththil mikuntha thuthiyumakku – pari

PowerPoint Presentation Slides for the song Parisutha Paranae Thuthi Umakku – பரிசுத்த பரனே துதியுமக்கு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisutha Paranae Thuthi Umakku – பரிசுத்த பரனே துதியுமக்கு PPT
Parisutha Paranae Thuthi Umakku PPT

துதியுமக்கு பரி பல்லவி பரிசுத்த பரனே பரலோகம் விட்டவரே சரணங்கள் நரர் சிறை விடுக்க சுரர் புகழ் வெறுத்த திருமறை முடிவே திருச்சித்தம் செய்ய நரரூபாய் தமிழ்