Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Parama Erusalaemae - பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே

பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே
ஆமென் அல்லேலூயா – (4)

1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் – கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் – மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் – ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுய வாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே – சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைநகராம் எருசலேமே

Parama Erusalaemae Lyrics in English

Parama erusalaemae Paralokam vittiranguthae alangaara manavaattiyaay alakaaka joliththiduthae Amen Alleluya – (4) 1. Erusalaemae koli than kunjukalai aettannaikkum aekkaththin kural kaettaேn thaaypparavai thutiththidum paasam kanntaen thaaparamaay sirakinil thanjamaanaen – kanivaana erusalaemae 2. Jeeva Dhevan nakarinil kutipukunthaen seeyon malaich seerukkuch sonthamaanaen neethi Dhevan neelati siram puthaiththaen neethimaankal aaviyil maruvi ninten – maelaana erusalaemae 3. Sarva sanga Sabaiyin angamaanaen sarvaloka naduvarin arukil vanthaen parinthuraikkum iraththaththil moolki ninten parivaaramaay thootharkal aati nintar – aahaa en erusalaemae 4. Viduthalaiyae viduthalai viduthalaiyae lokamathin mokaththil viduthalaiyae naanaeyenum suya vaalvil viduthalaiyae naathar thanil vaalvathaal viduthalaiyae – suyaatheena erusalaemae 5. Kannnneer yaavum kanivodu thutaiththiduvaar ennnamathin aekkangal theerththiduvaar maranamillai manaNnoyin thuyaramillai alaralillai alukaiyin sokamillai – thalainakaraam erusalaemae

PowerPoint Presentation Slides for the song Parama Erusalaemae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parama Erusalaemae – பரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே PPT
Parama Erusalaemae PPT

எருசலேமே விடுதலையே தேவன் நின்றேன் பரம பரலோகம் விட்டிறங்குதே அலங்கார மணவாட்டியாய் அழகாக ஜொலித்திடுதே ஆமென் அல்லேலூயா கோழி குஞ்சுகளை ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் தமிழ்