பல்லவி
பாவியாகவே வாறேன்;[1] பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்.
சரணங்கள்
1. பாவக்கறை போமோ என் பாடால்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத பாவியே நான் – பாவி
2. நீ வா, உன் பாவம் என்னால் நீங்கும் என்று சொன்னீரே;
தேவா, உன் வாக்கை நம்பி, சீர்கேடன் நீசனும் நான் – பாவி
3. பேய்மருள் உலகுடல் பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு போரில் அயர்ச்சியாய் நான் – பாவி
4. ஜீவ செல்வ ஞான சீல சுகங்கள் அற்றேன்,
தாவென்று வேண்டிய சாவில் சஞ்சரித்த நான் – பாவி
5. துன்பங்கள் நீக்கி உன்னைத் தூக்கி அணைப்பேன் என்றீர்;
இன்ப வாக்குத்தத்தத்தை இன்றைக்கே நம்பியே நான் – பாவி
6. உன்னைச் சேர ஒட்டாமல் ஊன்றிய தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல் உயிர் அடைந்தோங்கவே நான் – பாவி
Paaviyagave Vaaren – பாவியாகவே வாறேன் Lyrics in English
Pallavi paaviyaakavae vaaraேn;[1] paavam pokkum paliyaam en yaesuvae, vaaraேn. Saranangal 1. Paavakkarai pomo en paadaal? Un paadaalantip povathillai ente pollaatha paaviyae naan – paavi 2. Nee vaa, un paavam ennaal neengum entu sonneerae; thaevaa, un vaakkai nampi, seerkaedan neesanum naan – paavi 3. Paeymarul ulakudal paeraasaiyaal mayangip poyum avattaோdu poril ayarchchiyaay naan – paavi 4. Jeeva selva njaana seela sukangal atten, thaaventu vaenntiya saavil sanjariththa naan – paavi 5. Thunpangal neekki unnaith thookki annaippaen enteer; inpa vaakkuththaththaththai intaikkae nampiyae naan – paavi 6. Unnaich sera ottamal oontiya thatai yaavum unnanpaal neengi nal uyir atainthongavae naan – paavi
PowerPoint Presentation Slides for the song Paaviyagave Vaaren – பாவியாகவே வாறேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaviyagave Vaaren – பாவியாகவே வாறேன் PPT
Paaviyagave Vaaren PPT

