1. பாவிக்காய் மரித்த இயேசு
மேகமீதிறங்குவார்;
கோடித் தூதர் அவரோடு
வந்து ஆரவாரிப்பார்
அல்லேலூயா
கர்த்தர் பூமி ஆளுவார்.
2. தூய வெண் சிங்காசனத்தில்
வீற்று வெளிப்படுவார்
துன்புறுத்திச் சிலுவையில்
கொன்றோர் இயேசுவைக் காண்பார்
திகிலோடு
மேசியா என்றறிவார்.
3. அவர் தேகம் காயத்தோடு
அன்று காணப்படுமே
பக்தர்கள் மகிழ்ச்சியோடு
நோக்குவார்கள் அப்போதே
அவர் காயம்
தரும் நித்திய ரட்சிப்பை.
4. உம்மை நித்திய ராஜனாக
மாந்தர் போற்றச் செய்திடும்
ராஜரீகத்தை அன்பாக
தாங்கி செங்கோல் செலுத்தும்
அல்லேலூயா
வல்ல வேந்தே, வந்திடும்.
Paavikaai Maritha Yesu – பாவிக்காய் மரித்த இயேசு Lyrics in English
1. Paavikkaay mariththa Yesu maekameethiranguvaar; kotith thoothar avarodu vanthu aaravaarippaar Alleluya Karththar poomi aaluvaar. 2. Thooya venn singaasanaththil veettaு velippaduvaar thunpuraுththich siluvaiyil kontor Yesuvaik kaannpaar thikilodu maesiyaa entarivaar. 3. Avar thaekam kaayaththodu antu kaanappadumae paktharkal makilchchiyodu Nnokkuvaarkal appothae avar kaayam tharum niththiya ratchippai. 4. Ummai niththiya raajanaaka maanthar pottach seythidum raajareekaththai anpaaka thaangi sengaோl seluththum Alleluya valla vaenthae, vanthidum.
PowerPoint Presentation Slides for the song Paavikaai Maritha Yesu – பாவிக்காய் மரித்த இயேசு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paavikaai Maritha Yesu – பாவிக்காய் மரித்த இயேசு PPT
Paavikaai Maritha Yesu PPT

