Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Oru Maruntharum Kurumarunthu - ஒரு மருந்தரும் குருமருந்து

ஒரு மருந்தரும் குருமருந்-(து)
உம்பரத்தில் நான் கண்டேனே.

அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,
ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,
வரும் வினைகளை மாற்றும் மருந்து,
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. — ஒரு

1. சிங்கார வனத்தில் செழித்த மருந்து,
ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,
அங்குவிளை பவம் மாற்றும் மருந்து,
வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து — ஒரு

2. மோசே முதல் முன்னோர் காணா மருந்து,
மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,
தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,
தீர்க்கதரிசிகள் செப்பிய மருந்து — ஒரு

3. தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,
செவிடு குருடூமை தின்ற மருந்து,
மானா திருத்துவ மான மருந்து,
மனுவாய் உலகினில் வந்த மருந்து. — ஒரு

4. செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து,
ஜீவன் தவறா தருளும் மருந்து,
பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து,
பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து. — ஒரு

Oru Maruntharum Kurumarunthu Lyrics in English

Oru maruntharum kurumarun-(thu)
Umparaththil naan kanntaenae.

Arul marunthudan aanantha marunthu,
Aathiyittanaay mulaiththa marunthu,
Varum vinaikalai maattaுm marunthu,
Varaுmaiyullorkkae vaayththa marunthu. — oru

1. Singaara vanaththil seliththa marunthu,
Jeevatharu meethil padarntha marunthu,
Anguvilai pavam maattaுm marunthu,
Valla sarppa visham maayththa marunthu — oru

2. Moses muthal munnor kaannaa marunthu,
Motcha makimaiyaik kaattum marunthu,
Thaesaththor pinniyaith theerththa marunthu,
Theerkkatharisikal seppiya marunthu — oru

3. Theeraatha kushdaththaith theerththa marunthu,
Sevidu kurutoomai thinta marunthu,
Maanaa thiruththuva maana marunthu,
Manuvaay ulakinil vantha marunthu. — oru

4. Seththorai uyiro deluppum marunthu,
Jeevan thavaraa tharulum marunthu,
Paththaraich suththikariththidum marunthu,
Parama vaalvinil serkkum marunthu. — oru

PowerPoint Presentation Slides for the song Oru Maruntharum Kurumarunthu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Maruntharum Kurumarunthu – ஒரு மருந்தரும் குருமருந்து PPT
Oru Maruntharum Kurumarunthu PPT

மருந்து மாற்றும் தீர்த்த மருந்தரும் குருமருந்து உம்பரத்தில் கண்டேனே அருள் மருந்துடன் ஆனந்த ஆதியிற்றனாய் முளைத்த வினைகளை வறுமையுள்ளோர்க்கே வாய்த்த சிங்கார வனத்தில் செழித்த தமிழ்