Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Olai Karangalil Hosanna - ஓலைக் கரங்களில் ஓசன்னா

ஓலைக் கரங்களில் ஓசன்னா
சாலை நெடுகிலும் ஓசன்னா
தாவீதின் மகனே ஓசன்னா
உன்னதம் தனிலே ஓசானா

மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள்
பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள்
விடியல் வேந்தனை வரவிடுங்கள்
வாழ்வை நமக்குத் தரவிடுங்கள்

அடிமை நிலையை மாற்றப் பிறந்த
அன்பின் அரசர் இவர் தானோ ?
எளிமை நிலையை தோளில் சுமந்த
விண்ணின் மகனும் இவர் தானோ ?

மரியின் மகனாய் பிறந்தாரோ
மறியின் முதுகில் இருந்தாரோ
மனிதம் சுமந்து திரிந்தாரோ
மரணம் வருதல் அறிந்தாரோ

ஒலிவக் கிளைகள் ஒலிக்கச் செய்து
அரசின் அரசை வரவேற்போம்
எபிரே யத்துச் சிறுவர் போலே
குருத்து ஓலைகள் அசைத்திடுவோம்

இருளில் ஒளியாய் நடந்தாரோ
எங்கும் ஒளியா திருந்தாரோ
விண்ணின் வாழ்வைத் துறந்தாரோ
பாவம் மறையத் தெரிந்தாரோ

ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai Karangalil Hosanna Lyrics in English

Olaik karangalil Hosanna saalai nedukilum Hosanna thaaveethin makanae Hosanna unnatham thanilae osaanaa meetparai oorukkul alaiththidungal paathaiyil aataikal viriththidungal vitiyal vaenthanai varavidungal vaalvai namakkuth tharavidungal atimai nilaiyai maattap pirantha anpin arasar ivar thaano ? Elimai nilaiyai tholil sumantha vinnnnin makanum ivar thaano ? Mariyin makanaay piranthaaro mariyin muthukil irunthaaro manitham sumanthu thirinthaaro maranam varuthal arinthaaro olivak kilaikal olikkach seythu arasin arasai varavaerpom epirae yaththuch siraுvar polae kuruththu olaikal asaiththiduvom irulil oliyaay nadanthaaro engum oliyaa thirunthaaro vinnnnin vaalvaith thuranthaaro paavam maraiyath therinthaaro

PowerPoint Presentation Slides for the song ஓலைக் கரங்களில் ஓசன்னா – Olai Karangalil Hosanna

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Olai Karangalil Hosanna – ஓலைக் கரங்களில் ஓசன்னா PPT
Olai Karangalil Hosanna PPT

ஓசன்னா நிலையை தானோ விண்ணின் ஓலைக் கரங்களில் சாலை நெடுகிலும் தாவீதின் மகனே உன்னதம் தனிலே ஓசானா மீட்பரை ஊருக்குள் அழைத்திடுங்கள் பாதையில் ஆடைகள் விரித்திடுங்கள் தமிழ்