Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nithyananda Karthar Yesuve - நித்தியானந்த கர்த்தர் இயேசுவே-

சரணங்கள்

1. நித்தியானந்த கர்த்தர் இயேசுவே
நித்தமும் பிரகாசிக்கின்றார்
பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள்
பரிசுத்தமுடன் மின்னுதே

பல்லவி

சீயோனிலே சுவிசேஷகர்
ஜெப ஐக்கியமே காணுவோம்
ஜெயங் கொண்டோராய் ஜெப வீரராய்
சிலுவை யாத்திரை செல்லுவோம்

2. சிறு மந்தையின் பெரிய மேய்ப்பர்
நெருங்கி வந்து நிற்கிறார்
சின்னவன் ஆயிரம் பதினாயிரம்
சேனைத் திரளாய் மாறுவான் – சீயோனிலே

3. உலகமெங்கும் சுவிசேஷத்தின்
உயர்ந்த கொடி பறக்கும்
திறந்த வாசலுள் பிரவேசித்து
சிறந்த சேவை செய்குவோம் – சீயோனிலே

4. நரக வழி செல்லும் மாந்தருக்காய்
நாடு இராப்பகல் அழுதே
நம் தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்
நனைந்து வருந்தி ஜெபிப்போம் – சீயோனிலே

5. அவமானங்கள் பரிகாசங்கள்
அடைந்தாலும் நாம் உழைப்போம்
ஆத்தும பாரமும் பிரயாசமும்
அல்லும் பகலும் நாடுவோம் – சீயோனிலே

6. எதிரிகள் எதிரே பந்தி
எமக் காயத்தப் படுத்தி
எம் தலை எண்ணெயால் அபிஷேகித்தார்
எரிகோ மதிலும் வீழ்ந்திடும் – சீயோனிலே

7. சீயோன் என்னும் சுவிசேஷகி
சிகரத்தில் ஏறுகின்றாள்
இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்
இலக்கம் நோக்கியே ஓடுவோம் – சீயோனிலே

நித்தியானந்த கர்த்தர் இயேசுவே- Nithyananda Karthar Yesuve Lyrics in English

saranangal

1. niththiyaanantha karththar Yesuvae
niththamum pirakaasikkintar
parvatham meethilae pakthar paathangal
parisuththamudan minnuthae

pallavi

seeyonilae suviseshakar
jepa aikkiyamae kaanuvom
jeyang konntooraay jepa veeraraay
siluvai yaaththirai selluvom

2. sitru manthaiyin periya maeyppar
nerungi vanthu nirkiraar
sinnavan aayiram pathinaayiram
senaith thiralaay maaruvaan – seeyonilae

3. ulakamengum suviseshaththin
uyarntha koti parakkum
thirantha vaasalul piravaesiththu
sirantha sevai seykuvom – seeyonilae

4. naraka vali sellum maantharukkaay
naadu iraappakal aluthae
nam thalai thannnneeraay kannkal kannnneeraay
nanainthu varunthi jepippom – seeyonilae

5. avamaanangal parikaasangal
atainthaalum naam ulaippom
aaththuma paaramum pirayaasamum
allum pakalum naaduvom – seeyonilae

6. ethirikal ethirae panthi
emak kaayaththap paduththi
em thalai ennnneyaal apishaekiththaar
eriko mathilum veelnthidum – seeyonilae

7. seeyon ennum suviseshaki
sikaraththil aerukintal
ilatchaththu naarpaththu naalaayiram
ilakkam Nnokkiyae oduvom – seeyonilae

PowerPoint Presentation Slides for the song நித்தியானந்த கர்த்தர் இயேசுவே- Nithyananda Karthar Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nithyananda Karthar Yesuve – நித்தியானந்த கர்த்தர் இயேசுவே- PPT
Nithyananda Karthar Yesuve PPT

சீயோனிலே ஜெப தலை சரணங்கள் நித்தியானந்த கர்த்தர் இயேசுவே நித்தமும் பிரகாசிக்கின்றார் பர்வதம் மீதிலே பக்தர் பாதங்கள் பரிசுத்தமுடன் மின்னுதே பல்லவி சுவிசேஷகர் ஐக்கியமே காணுவோம் தமிழ்