பல்லவி
நித்தம் அருள்செய் தயாளனே!-எங்கள்
நேசா யேசு மணாளனே!-ஸ்வாமி – நித்தம்.
அனுபல்லவி
உத்தம சற்குண தேவ குமாரா!-
உம்பர்கள் சந்ததம் போற்றும் சிங்காரா!
சத்திய வேதவி னோதலங்காரா!-
சதிசெய்யும் பேய் தலை சிதைத்த சிங்காரா! – நித்தம்
சரணங்கள்
1. பட்சப் பரம குமாரனே, எங்கள் பாவந்தீரும்
மாவீரனே ஸ்வாமி!
அட்சய சவுந்தர ஆத்துமநாதா, அடியவர் துதிசெய்யும்
ஆரணபோதா,
ரட்சண்யச் சுப சுவி சேடப்பிரஸ்தாபா, ராசகெம்பீர,
சங்கீத பொற்பாதா. – நித்தம்
2. சென்றாண்டெமை முகம் பார்த்தவா, ஒரு சேதம் விக்கின
மறக் காத்தவா,-ஸ்வாமி!
இன்றோர் புதுவரு டாரம்பங் கண்டோம், ஏக சந்தோஷ
மாய்ச் சந்தித்துக் கொண்டோம்.
குன்றா உமதுநல் லாவியை ஈந்து கூடவே இருந்தடியார்
ஜெபங்கேட்டு. – நித்தம்
Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே Lyrics in English
Pallavi
Niththam arulsey thayaalanae!-engal
Naesaa yaesu mannaalanae!-svaami – niththam.
Anupallavi
Uththama sarkuna thaeva kumaaraa!-
Umparkal santhatham pottaுm singaaraa!
Saththiya vaethavi nothalangaaraa!-
Sathiseyyum paey thalai sithaiththa singaaraa! – niththam
Saranangal
1. Patchap parama kumaaranae, engal paavantheerum
Maaveeranae svaami!
Atchaya savunthara aaththumanaathaa, atiyavar thuthiseyyum
Aaranapothaa,
Ratchannyach supa suvi sedappirasthaapaa, raasakempeera,
Sangaீtha porpaathaa. – niththam
2. Sentanndemai mukam paarththavaa, oru setham vikkina
Marak kaaththavaa,-svaami!
Intor puthuvaru daarampang kanntoom, aeka santhosha
Maaych santhiththuk konntoom.
Kunta umathunal laaviyai eenthu koodavae irunthatiyaar
Jepangaettu. – niththam
PowerPoint Presentation Slides for the song Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Niththam Arulsei Thayalanae – நித்தம் அருள்செய் தயாளனே PPT
Niththam Arulsei Thayalanae PPT

