Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nithiyaananthai Naadu - நித்தியானந்தத்தை நாடு

பல்லவி

நித்தியானந்தத்தை நாடு – பர
நிர்மல சுகந்தேடு மனமே

அனுபல்லவி

சத்திய மார்க்கந்தனிலே கூடு
சற்சன சங்கத்தினோடுறவாடு

1. இந்திர ஜாலம் உலக வைபோகம்
இன்றைக்கிருப்பதுவோ – சந்தேகம்
அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம்
ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் – நித்

2. தன தானிய முதலான சம்பத்து
சாஸ்வதமோ? அதற்காயிரந் தத்து
தினமும் கவலைகள் விளைத்திடும் வித்து
சீச்சீ அதனை விரும்பல் விபத்து – நித்

3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம்
மிருகாதிகள் சூழ் மாமிசப் பிண்டம்
மெய்யே இதற்கிங்கு நித்திய கண்டம்
புண்ணியன் பாதமுனக் காயிரம் தண்டம் – நித்

4. காண்பதெல்லாம் நிலை அல்ல அநித்யம்
காய மிறந்திட வேண்டு மகத்தியம்
வீண் பொருள் மீதுனக் கென்ன பைத்தியம்?
வேதாகமமே சொல்வது சத்தியம் – நித்

Nithiyaananthai Naadu – நித்தியானந்தத்தை நாடு Lyrics in English

Pallavi niththiyaananthaththai naadu – para nirmala sukanthaedu manamae anupallavi saththiya maarkkanthanilae koodu sarsana sangaththinoduravaadu 1. Inthira jaalam ulaka vaipokam intaikkiruppathuvo – santhaekam anthara minnalpol aliyum iththaekam aiyo! Athanudanunakkenna sinaekam – nith 2. Thana thaaniya muthalaana sampaththu saasvathamo? Atharkaayiran thaththu thinamum kavalaikal vilaiththidum viththu seechchaீ athanai virumpal vipaththu – nith 3. Meyyae ontukku muthavaatha paanndam mirukaathikal sool maamisap pinndam meyyae itharkingu niththiya kanndam punnnniyan paathamunak kaayiram thanndam – nith 4. Kaannpathellaam nilai alla anithyam kaaya miranthida vaenndu makaththiyam veenn porul meethunak kenna paiththiyam? Vaethaakamamae solvathu saththiyam – nith

PowerPoint Presentation Slides for the song Nithiyaananthai Naadu – நித்தியானந்தத்தை நாடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nithiyaananthai Naadu – நித்தியானந்தத்தை நாடு PPT
Nithiyaananthai Naadu PPT

நித் மெய்யே பல்லவி நித்தியானந்தத்தை நாடு பர நிர்மல சுகந்தேடு மனமே அனுபல்லவி சத்திய மார்க்கந்தனிலே கூடு சற்சன சங்கத்தினோடுறவாடு இந்திர ஜாலம் உலக வைபோகம் தமிழ்