நீயுனக்குச் சொந்தமல்லவே; மீட்கப்பட்ட பாவி,
நீயுனக்குச் சொந்தமல்லவே.
நீயுனக்குச் சொந்தமல்லவே,
நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம். — நீ
1. சிலுவை மரத்தில் தொங்கி மரித்தாரே; திருரத்தம், ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே;
வலிய பரிசத்தால் கொண்டாரே;
வான மகிமை யுனக்கீவாரே. — நீ
2. இந்த நன்றியை மறந்து போனாயோ? யேசுவைவிட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்த தமுனதிதயங் காயமும்,
சாமி கிறிஸ்தினுடைய தல்லவோ? — நீ
3. பழைய பாவத்தாசை வருகுதோ? பசாசின்மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே,
அக்கினிக்கடல் தள்ளுவானேன்? — நீ
4. பிழைக்கினும் அவர்க்கே பிழைப்பாயே; உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே,
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்,
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய். — நீ
Neeyunakkuch Sonthamallavae Lyrics in English
Neeyunakkuch sonthamallavae; meetkappatta paavi, neeyunakkuch sonthamallavae. Neeyunakkuch sonthamallavae, nimalan Kristhu naatharkkae sontham. — nee 1. Siluvai maraththil thongi mariththaarae; thiruraththam, raththam thiru vilaavil vatiyuthu paarae; valiya parisaththaal konndaarae; vaana makimai yunakgeevaarae. — nee 2. Intha nantiyai maranthu ponaayo? Yaesuvaivittu engaeyaakilum marainthu thirivaayo? Santha thamunathithayang kaayamum, saami kiristhinutaiya thallavo? — nee 3. Palaiya paavaththaasai varukutho? Pasaasinmaelae patchamunakkuth thirumpa varukutho? Aliyum nimishath thaasai kaattiyae, akkinikkadal thalluvaanaen? — nee 4. Pilaikkinum avarkkae pilaippaayae; ulakaivittup piriyinum avarkkae marippaayae, ulaiththu mariththum uyirththa naatharin, uyarpathaviyil entum nilaippaay. — nee
PowerPoint Presentation Slides for the song Neeyunakkuch Sonthamallavae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neeyunakkuch Sonthamallavae – நீயுனக்குச் சொந்தமல்லவே மீட்கப்பட்ட பாவி PPT
Neeyunakkuch Sonthamallavae PPT

