Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neer Thantha Nanmai - நீர் தந்த நன்மை

1. நீர் தந்த நன்மை யாவையும்
நினைத்து, கர்த்தரே,
மகிழ்ச்சியோடு என்றைக்கும்
நான் துதி செய்யவே.

2. குழந்தைப் பருவமுதல்
குறைவில்லாமலே
எனக்களித்த நன்மைகள்
ஏராளமானதே.

3. என்னோடு வாலிபத்திலும்
இருந்தீர் தேவரீர்
இக்கட்டுண்டான காலத்தும்
விழாமல் தங்கினீர்.

4. அநேகமான தீமைகள்
அண்டாமல் தடுத்தீர்
கைம்மாறில்லாத நன்மைகள்
கர்த்தாவே பொழிந்தீர்.

5. இம்மையில் என்றும் தாழ்மையாய்
தெய்வன்பை நினைப்பேன்;
மறுமையில் வணக்கமாய்
உம்மையே போற்றுவேன்.

6. புகழ்ச்சி, துதி, தோத்திரம்
ஒன்றான உமக்கே
இகத்திலும் பரத்திலும்
எழும்பத் தகுமே.

Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை Lyrics in English

1. Neer thantha nanmai yaavaiyum ninaiththu, karththarae, makilchchiyodu entaikkum naan thuthi seyyavae. 2. Kulanthaip paruvamuthal kuraivillaamalae enakkaliththa nanmaikal aeraalamaanathae. 3. Ennodu vaalipaththilum iruntheer thaevareer ikkattunndaana kaalaththum vilaamal thangineer. 4. Anaekamaana theemaikal anndaamal thaduththeer kaimmaarillaatha nanmaikal karththaavae polintheer. 5. Immaiyil entum thaalmaiyaay theyvanpai ninaippaen; maraுmaiyil vanakkamaay ummaiyae pottaுvaen. 6. Pukalchchi, thuthi, thoththiram ontana umakkae ikaththilum paraththilum elumpath thakumae.

PowerPoint Presentation Slides for the song Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Thantha Nanmai – நீர் தந்த நன்மை PPT
Neer Thantha Nanmai PPT

துதி நன்மைகள் நீர் தந்த நன்மை யாவையும் நினைத்து கர்த்தரே மகிழ்ச்சியோடு என்றைக்கும் செய்யவே குழந்தைப் பருவமுதல் குறைவில்லாமலே எனக்களித்த ஏராளமானதே என்னோடு வாலிபத்திலும் இருந்தீர் தமிழ்