Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naatha Um Vaarththai Kooravae - நாதா உம் வார்த்தை கூறவே

1. நாதா உம் வார்த்தை கூறவே
என்னோடு பேசியருளும்
கெட்டோரை நானும் தேடவே
நீர் என்னைத் தேடிப் பிடியும்.

2. வழி விட்டலைவோருக்கு
நான் காட்ட என்னை நடத்தும்
மன்னாவைப் பசியுள்ளோர்க்கு
நான் ஊட்ட என்னைப் போஷியும்

3. மா துன்ப சாகரத்தினில்
அழுந்துவோரைத் தாங்கவும்,
கன்மலையான உம்மினில்
நான் ஊன்றி நிற்கச் செய்திடும்.

4. அநேக நெஞ்சின் ஆழத்தை
என் வார்த்தை ஊடுருவவும்,
சிறந்த உந்தன் சத்தியத்தை
எனக்குப் போதித்தருளும்.

5. நான் இளைத்தோரைத் தேற்றவும்
சமயோசிதமாகவே
சுகிர்த வாக்குரைக்கவும்
என்னையும் தேற்றும், கர்த்தரே.

6. நான் நேசம் பொங்கும் நெஞ்சினால்
உம் அன்பும் மாண்பும் போற்றவே
உம் பரிபூரணத்தினால்
என் உள்ளத்தை நிரப்புமே

7. உம் மகிமை சந்தோஷத்தில்
நான் பங்கடையும் வரைக்கும்
உம் சித்தம், காலம், இடத்தில்
நீர் என்னை ஆட்கொண்டருளும்.

Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே Lyrics in English

1. Naathaa um vaarththai kooravae ennodu paesiyarulum kettaோrai naanum thaedavae neer ennaith thaetip pitiyum. 2. Vali vittalaivorukku naan kaatta ennai nadaththum mannaavaip pasiyullorkku naan ootta ennaip poshiyum 3. Maa thunpa saakaraththinil alunthuvoraith thaangavum, kanmalaiyaana umminil naan oonti nirkach seythidum. 4. Anaeka nenjin aalaththai en vaarththai ooduruvavum, sirantha unthan saththiyaththai enakkup pothiththarulum. 5. Naan ilaiththoraith thaettavum samayosithamaakavae sukirtha vaakkuraikkavum ennaiyum thaettaுm, karththarae. 6. Naan naesam pongum nenjinaal um anpum maannpum pottavae um paripooranaththinaal en ullaththai nirappumae 7. Um makimai santhoshaththil naan pangataiyum varaikkum um siththam, kaalam, idaththil neer ennai aatkonndarulum.

PowerPoint Presentation Slides for the song Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naatha Um Vaarththai Kooravae – நாதா உம் வார்த்தை கூறவே PPT
Naatha Um Vaarththai Kooravae PPT

உம் வார்த்தை நீர் என்னை நாதா கூறவே என்னோடு பேசியருளும் கெட்டோரை நானும் தேடவே என்னைத் தேடிப் பிடியும் வழி விட்டலைவோருக்கு காட்ட நடத்தும் மன்னாவைப் தமிழ்