Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Naam Niththirai Seithu - நாம் நித்திரை செய்து

1. நாம் நித்திரை செய்து விழித்தோம்
நற்சுகம் பலம் அடைந்தோம்
நாள்தோறும் தெய்வ அன்பையே
உணர்ந்து ஸ்துதி செய்வோமே.

2. தீங்கை விலக்கிப் பாவத்தை
மன்னித்து, மோட்ச நம்பிக்கை
மென்மேலும் ஓங்க நாதனார்
கடாட்சம் செய்து காக்கிறார்.

3. அன்றன்று வரும் வேலையை
நாம் செய்கின்ற பணிவிடை
என்றெண்ணியே, ஒவ்வொன்றையும்
படைப்போம் பலியாகவும்.

4. நம்மை வெறுத்து, கர்த்தரின்
சமீபம் சேர விரும்பின்,
அன்றாடக கடமையும்
ஓர் ஏதுவாக விளங்கும்.

5. ஜெபிக்கும் வண்ணம் உய்யவும்,
கர்த்தாவே, பலம் ஈந்திடும்;
உம்மண்டை நாங்கள் வாழவும்
தகுந்தோர் ஆக்கியருளும்.

Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து Lyrics in English

1. Naam niththirai seythu viliththom narsukam palam atainthom naalthoraுm theyva anpaiyae unarnthu sthuthi seyvomae. 2. Theengai vilakkip paavaththai manniththu, motcha nampikkai menmaelum onga naathanaar kadaatcham seythu kaakkiraar. 3. Antantu varum vaelaiyai naam seykinta pannivitai entennnniyae, ovvontaiyum pataippom paliyaakavum. 4. Nammai veraுththu, karththarin sameepam sera virumpin, antadaka kadamaiyum or aethuvaaka vilangum. 5. Jepikkum vannnam uyyavum, karththaavae, palam eenthidum; ummanntai naangal vaalavum thakunthor aakkiyarulum.

PowerPoint Presentation Slides for the song Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naam Niththirai Seithu – நாம் நித்திரை செய்து PPT
Naam Niththirai Seithu PPT

செய்து பலம் நித்திரை விழித்தோம் நற்சுகம் அடைந்தோம் நாள்தோறும் தெய்வ அன்பையே உணர்ந்து ஸ்துதி செய்வோமே தீங்கை விலக்கிப் பாவத்தை மன்னித்து மோட்ச நம்பிக்கை மென்மேலும் தமிழ்