Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Megameethil Yesu Swamy - மேகமீதில் இயேசு சுவாமி-

பல்லவி

மேகமீதில் இயேசு சுவாமி
வேகம் வாராரே

அனுபல்லவி

ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே
அவர் வாராரே

1. ஆண்டவர் தாமே ஆர்ப்பரிப்போடே
அவனியில் வாராரே
மீண்டவரோ மேலோகமே செல்ல
மேதினியை விடுவார் – மேகமீதில்

2. கிறிஸ்துவுக்குள் மரித்தோரெல்லாம்
கிளம்பியே யெழும்பிடுவார்
மரிக்காதிருக்கும் பரிசுத்தரெல்லாம்
மறைந்தே போவாரே – மேகமீதில்

3. பாடுபட்டோருக்குப் பலனளிப்பாரே
பாடுபட்டவர் தாமே
கூடும் நமக்கோ குறைவில்லாப் பலனையே
கூவியே கொடுத்திடுவார் – மேகமீதில்

4. அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே
அவர் வரும் வேளையை எவருமே அறியார்
ஆண்டவரே யறிவார் – மேகமீதில்

5. ஆயிரம் வருஷம் ஆளுகை செய்வார்
ஆண்டவர் இயேசு தாமே
நீதி சமாதானம் நிறைந்தேயிருக்கும்
ஜோதியின் ஆளுகையில் – மேகமீதில்

6. அல்லேலூயா கீதமே பாடி
அகமகிழ்ந்தாடிடுவோம்
வல்லவர் வரும் வேளையுமிதோ
மெல்லவே நெருங்கிற்றே – மேகமீதில்

மேகமீதில் இயேசு சுவாமி- Megameethil Yesu Swamy Lyrics in English

pallavi

maekameethil Yesu suvaami
vaekam vaaraarae

anupallavi

aayaththamullorai aakaayanj serkkavae
avar vaaraarae

1. aanndavar thaamae aarpparippotae
avaniyil vaaraarae
meenndavaro maelokamae sella
maethiniyai viduvaar – maekameethil

2. kiristhuvukkul mariththorellaam
kilampiyae yelumpiduvaar
marikkaathirukkum parisuththarellaam
marainthae povaarae – maekameethil

3. paadupattaோrukkup palanalippaarae
paadupattavar thaamae
koodum namakko kuraivillaap palanaiyae
kooviyae koduththiduvaar – maekameethil

4. avaruraiththa ataiyaalangalellaam
thavaraamal nadakkintathae
avar varum vaelaiyai evarumae ariyaar
aanndavarae yarivaar – maekameethil

5. aayiram varusham aalukai seyvaar
aanndavar Yesu thaamae
neethi samaathaanam nirainthaeyirukkum
jothiyin aalukaiyil – maekameethil

6. allaelooyaa geethamae paati
akamakilnthaadiduvom
vallavar varum vaelaiyumitho
mellavae nerungitte – maekameethil

PowerPoint Presentation Slides for the song மேகமீதில் இயேசு சுவாமி- Megameethil Yesu Swamy

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Megameethil Yesu Swamy – மேகமீதில் இயேசு சுவாமி- PPT
Megameethil Yesu Swamy PPT

மேகமீதில் வாராரே தாமே இயேசு ஆண்டவர் பல்லவி சுவாமி வேகம் அனுபல்லவி ஆயத்தமுள்ளோரை ஆகாயஞ் சேர்க்கவே ஆர்ப்பரிப்போடே அவனியில் மீண்டவரோ மேலோகமே செல்ல மேதினியை விடுவார் தமிழ்