Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mazhil Mazhil Manthayae - மகிழ் மகிழ் மந்தையே

பல்லவி

மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !

அனுபல்லவி

மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;
நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று – மகிழ்

சரணங்கள்

வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலறினார் அல்லேலுயா!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,
ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ்

ஏசுபரன் நமக்கு இறையனார் இது
எல்லார்க்குஞ் சந்தோசம் அல்லேலூயா
வாசம் நாம் செய்ய தந்தை வளவில் இடம்பிடித்த
நேசமுன்னத நேசம் அல்லேலூயா, இன்று -மகிழ்

தந்தை வலபாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலுயா !
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார் ;
மந்தையே , உந்தனுக்காய் அல்லேலுயா , இன்று- மகிழ்

மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர் ,
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலுயா !
பாழ்ஜெகம் நிலையல்ல ,பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலுயா , இன்று -மகிழ்

பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலுயா !
ஏதேமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
யாதுமோசந்தொடரும்? அல்லேலுயா , இன்று

Mazhil Mazhil Manthayae- மகிழ் மகிழ் மந்தையே Lyrics in English

Pallavi makil makil manthaiyae, nee; allaeluyaa ! Paran mainthan paramaerinaar, allaeluyaa ! Anupallavi makil, makil; parama mainthan makaththuva paramaerinaar ; nikala thiruch senai paadum allaeluyaa ,intu – makil saranangal vaanamellaam nirappa manusha mainthan ellaa vaanangal maelarinaar allaeluyaa! Theenathayaalu nammaich serntha thalaivaraayinaar , njaanamudan paadungal , allaeluyaa , intu -makil aesuparan namakku iraiyanaar ithu ellaarkkunj santhosam Alleluya vaasam naam seyya thanthai valavil idampitiththa naesamunnatha naesam Alleluya, intu -makil thanthai valapaakaththil saththiya Kristhu engal saththurukkal maersiranthaar, allaeluyaa ! Sonthak kaayangal kaattich sukirthamudan jepippaar ; manthaiyae , unthanukkaay allaeluyaa , intu- makil motcha suthantharar naam vaanorukkum oppar , mutivillaap paakkiyar naam, allaeluyaa ! Paaljekam nilaiyalla ,parama sanjaarikal naam sootchaுmak karththanukkae allaeluyaa , intu -makil poothalamanthamattum ungaludanae niththam punithan iruppaenentar; allaeluyaa ! Aethaemakkuk kuraichchal aesengalotirunthaal, yaathumosanthodarum? Allaeluyaa , intu

PowerPoint Presentation Slides for the song Mazhil Mazhil Manthayae- மகிழ் மகிழ் மந்தையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mazhil Mazhil Manthayae – மகிழ் மகிழ் மந்தையே PPT
Mazhil Mazhil Manthayae PPT

அல்லேலுயா மகிழ் இன்று மைந்தன் மந்தையே பரமேறினார் பரம அல்லேலூயா தந்தை பல்லவி பரன் அனுபல்லவி மகத்துவ நிகழ திருச் சேனை பாடும் சரணங்கள் வானமெல்லாம் தமிழ்