Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimaiyin Devan - மகிமையின் தேவன்

மகிமையின் தேவன்
மனு உரு எடுத்தார்
மகிபனை கொண்டாடுங்கள் இந்த
மனுகுலம் காக்க
தம்முடன் சேர்க்க
இரங்கினார் துதிபாடுங்கள்.

இதய தாகத்தின் இன்ப கீதங்கள்
சலங்கை ஓசையின் சங்கீதங்கள்
ஜாதிகள் யாவும் துதிகளாகவே
அதிபர் இயேசு மகிமை கூறவே

மங்கலங்கள் தங்கி வாழவே
மண்ணின் மாயை ஓடிப்போகவே
விண்ணை துறந்த தேவமைந்தனார்
என்னை மீட்க பாலனாகினார்.
விண்ணில் தூதரே
மண்ணில் ஆயரே
கூடி பாடினார் நேய மாகவே
எண்ணிலாத புதுமைகள் எல்லாம்
மண்ணில் வந்து சேர்ந்ததம்மா
விண்ணையந்த நீதியின் சூரீயன்
மண்ணில் வந்து தவழ்ந்ததம்மா
தேவகோபம் இன்று மாறவே
சாபம்யாவும் ஓடிப்போகவே
புதுமைகளும் பிறந்ததுவே
பழமைகளும் ஒழிந்திடவே

கிருபை பெற்ற மரியின் வாழ்விலே
பெருமை சேர்த்து மேன்மைப்படுத்தினார்
அலகை ஜெயித்து அகிலம் மீட்கவே
அடிமை உருவில் கருவு மாகினார்
நம்மை மீட்கவே
தம்மை தாழ்த்தியே
விந்தை பாலனாய்
கந்தை சூடியே
நிந்தை யாவும் போக்கிட வந்த
நிமிலன் தேவ மைந்தனம்மா
வாதை நீங்கி
பாவங்கள் போக்கிட
வந்த வல்ல ஈசனம்மா
தூய ஆவி தந்த ரூபமே
கன்னி மடியில் வந்த தீபமே
நிந்தைகளும் அழிந்ததுவே சிந்தைகளும்
தெளிந்ததுவே

Magimaiyin Devan Manu Uru Lyrics in English

makimaiyin thaevan
manu uru eduththaar
makipanai konndaadungal intha
manukulam kaakka
thammudan serkka
iranginaar thuthipaadungal.

ithaya thaakaththin inpa geethangal
salangai osaiyin sangaீthangal
jaathikal yaavum thuthikalaakavae
athipar Yesu makimai kooravae

mangalangal thangi vaalavae
mannnnin maayai otippokavae
vinnnnai thurantha thaevamainthanaar
ennai meetka paalanaakinaar.
vinnnnil thootharae
mannnnil aayarae
kooti paatinaar naeya maakavae
ennnnilaatha puthumaikal ellaam
mannnnil vanthu sernthathammaa
vinnnnaiyantha neethiyin sooreeyan
mannnnil vanthu thavalnthathammaa
thaevakopam intu maaravae
saapamyaavum otippokavae
puthumaikalum piranthathuvae
palamaikalum olinthidavae

kirupai petta mariyin vaalvilae
perumai serththu maenmaippaduththinaar
alakai jeyiththu akilam meetkavae
atimai uruvil karuvu maakinaar
nammai meetkavae
thammai thaalththiyae
vinthai paalanaay
kanthai sootiyae
ninthai yaavum pokkida vantha
nimilan thaeva mainthanammaa
vaathai neengi
paavangal pokkida
vantha valla eesanammaa
thooya aavi thantha roopamae
kanni matiyil vantha theepamae
ninthaikalum alinthathuvae sinthaikalum
thelinthathuvae

PowerPoint Presentation Slides for the song Magimaiyin Devan Manu Uru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimaiyin Devan – மகிமையின் தேவன் PPT
Magimaiyin Devan PPT

மண்ணில் யாவும் ஓடிப்போகவே மீட்கவே போக்கிட மகிமையின் தேவன் மனு உரு எடுத்தார் மகிபனை கொண்டாடுங்கள் மனுகுலம் காக்க தம்முடன் சேர்க்க இரங்கினார் துதிபாடுங்கள் இதய தமிழ்