Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maasattra Deiva Aattukutti - மாசற்ற தெய்வாட்டுக்குட்டி

1.மாசற்ற தெய்வாட்டுக்குட்டி மனுவேல் மேசியாவே
வாரும் எனைப் பாரும் பவந்தீரு மேசையாவே

2. தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தென்
தேவா வினைதீர் வா வென்றுன் திருப்பாதத்தைத் துயர்ந்தேன்.

3.திருப்பாத மென் கதியே பவத் திரளோ பெருமலையே
தீயேனுடல் சிரசும் அதைச் சுமக்கப் பெலனிலையே.

4.சுமந்தோன் இங்கெ வா வா வை உன் சுமையை என் தோள் மேலே
சுக ஆறுதல் தருவேனென்று சொன்னீர் மனுவேலே

5.சொன்னீர் ஐயா ரத்தாம்பரச் சிவப்பாம் பவக் கறையும்
சொன்னீர் படப் பறந்தொடி என்தேகம் வெண்மை நிறையும்.

6.நிறைவா கரக்கடலே மறை நிறை யாகமத்திடலே
குறையா வரம்தயை பூரணம் குடிகொண்டதுன் னுடலே.

7.உடலே திருவிருந்து சுவாமி உதிரம் திருமருந்து
உலகாசையைத் துறந்து எனதுளமே அதை அருந்து.

8.அருந்தப் பவச்சுமை நோவிடர் ஆறாத்துயர் சாபம்
அகலும் அவர் பதச் சேவையால் ஆறுந் தேவ கோபம்.

9.ஆறும் மனந்தேறும் அவரருட்கண் என்மேல் சாரும்
ஆத்மா கரையேற அவர் அன்பை ருசி பாரும்.

10.அன்பால் எனைத்தழுவி என்றன் ஆத்மக் களை யாற்றி
அவர் மார்பினில் அணைத்தார் ஏழையடியேன் மனந்தேற்றி.

11.மனமோ யேசு சாந்தம் அன்பு மனத்தாழ்மையைப் பூண்டு
மனுவேல் யேசுநாமம் உன்னில் மகிமைப்பட வேண்டு.

Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி Lyrics in English

1.maasatta theyvaattukkutti manuvael maesiyaavae vaarum enaip paarum pavantheeru maesaiyaavae 2. Theerum vakai kaannaathintha jeka meethalain thayarnthen thaevaa vinaitheer vaa ventun thiruppaathaththaith thuyarnthaen. 3.thiruppaatha men kathiyae pavath thiralo perumalaiyae theeyaenudal sirasum athaich sumakkap pelanilaiyae. 4.sumanthon ingaெ vaa vaa vai un sumaiyai en thol maelae suka aaraுthal tharuvaenentu sonneer manuvaelae 5.sonneer aiyaa raththaamparach sivappaam pavak karaiyum sonneer padap paranthoti enthaekam vennmai niraiyum. 6.niraivaa karakkadalae marai nirai yaakamaththidalae kuraiyaa varamthayai pooranam kutikonndathun nudalae. 7.udalae thiruvirunthu suvaami uthiram thirumarunthu ulakaasaiyaith thuranthu enathulamae athai arunthu. 8.arunthap pavachchumai Nnovidar aaraaththuyar saapam akalum avar pathach sevaiyaal aaraுn thaeva kopam. 9.aaraுm mananthaeraுm avararutkann enmael saarum aathmaa karaiyaera avar anpai rusi paarum. 10.anpaal enaiththaluvi entan aathmak kalai yaatti avar maarpinil annaiththaar aelaiyatiyaen mananthaetti. 11.manamo yaesu saantham anpu manaththaalmaiyaip poonndu manuvael yaesunaamam unnil makimaippada vaenndu.

PowerPoint Presentation Slides for the song Maasattra Deiva Aattukutti- மாசற்ற தெய்வாட்டுக்குட்டி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maasattra Deiva Aattukutti – மாசற்ற தெய்வாட்டுக்குட்டி PPT
Maasattra Deiva Aattukutti PPT

வா சொன்னீர் மனுவேல் பாரும் மாசற்ற தெய்வாட்டுக்குட்டி மேசியாவே வாரும் எனைப் பவந்தீரு மேசையாவே தீரும் வகை காணாதிந்த ஜெக மீதலைந் தயர்ந்தென் தேவா வினைதீர் தமிழ்