Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kurusinil Thongiyae - குருசினில் தொங்கியே குருதியும் வடிய

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
கொள்ளாய் கண் கொண்டு

1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில் சேர்த்தையோ! – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
சேனைத்திரள் சூழ — குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்

படுத்திய கொடுமைதனை — குருசினில்

3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்

சகியாமல், நாணுதையோ! – தேவ

சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ? — குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த

இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்

திறந்தூறோடுது பார் — குருசினில்

5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ? – நின்

எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ? — குருசினில்

Kurusinil Thongiyae Lyrics in English

Kurusinil thongiyae kuruthiyum vatiya
Kolkathaa malaithanilae – nam
Kuruvaesu suvaami kodun thuyar paavi,
Kollaay kann keாnndu

1. Sirasinil munnmuti uraுththida, arainthae
Siluvaiyil serththaiyo! – theeyar
Thirukkarang kaalkalil aannikalatiththaar,
Senaiththiral soola — kurusinil

2. Paathakar naduvil paaviyinaesan
Paathakan pol thonga – yootha
Paathakar parikaasangal pannnnip
Paduththiya kodumaithanai — kurusinil

3. Santhira sooriya sasala vaan senaikal
Sakiyaamal, naanuthaiyo! – thaeva
Sunthara maintha nuyir vidukaatchiyaal
Thutikkaa nenjunntoo? — kurusinil

4. Eettiyaal sevakan ettiyae kuththa
Iraivan vilaavathilae – avar
Theettiya thitchaைk kuruthiyum jalamum
Thiranthooroduthu paar — kurusinil

5. Jerusalem maathae, maraுki neeyaluthu
Aengip pulampalaiyo? – nin
Erusalaiyathipan ila manavaalan
Eduththa kola mitho? — kurusinil

PowerPoint Presentation Slides for the song Kurusinil Thongiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் வடிய PPT
Kurusinil Thongiyae PPT

குருசினில் குருதியும் பாதகர் தொங்கியே வடிய கொல்கதா மலைதனிலே நம் குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி கொள்ளாய் கண் கொண்டு சிரசினில் முண்முடி தமிழ்