கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன் மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்
1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில்
மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது – நாம்
2. இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும் – (2) – நாம்
3. தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை – (2) – நாம்
4. பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரை படமாயுள்ள
யாரையும் அணுகாது – (2) – நாம்
கிறிஸ்துவின் அடைக்கலத்தில் – Kiristhuvin Adaikalathil Lyrics in English
Kristhuvin ataikkalaththil siluvaiyin maanilalil kan malai vetippathanil pukalidam kanndu konntoom 1. Karchchikkum singangalum onaayin koottangalum aatitaik kutilinil manthaikal naduvinil nerungavum mutiyaathu – naam 2. Iratchippin geethangalum makilchchiyin sapthangalum kaarmaeka iruttinil theepamaay ilangidum karththaraal isai valarum – (2) – naam 3. Thaevanin iraajjiyaththai thisai engum virivaakkidum aasaiyil jepiththidum atharkente vaalnthidum yaarukkum kalakkam illai – (2) – naam 4. Pollonin poraamaikalum maraivaana sathi palavum vallonin karaththinil varai padamaayulla yaaraiyum anukaathu – (2) – naam
PowerPoint Presentation Slides for the song கிறிஸ்துவின் அடைக்கலத்தில் – Kiristhuvin Adaikalathil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kiristhuvin Adaikalathil – கிறிஸ்துவின் அடைக்கலத்தில் PPT
Kiristhuvin Adaikalathil PPT

