Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kinjithamum Nenjae Anjidathae - கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல
கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ

அனுபல்லவி

வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும்

சரணங்கள்

1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
பத்தியில் தெளிக்கவும், – நித்ய
ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்,
சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் – கிஞ்சிதமும்

2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
கண்டடைந்தார் பேறு? – நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும் பார் இது மா ஜெயம் – கிஞ்சிதமும்

3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் – அதின்
தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
துணை அவர் பாதம்
ஏற்றர வணைக்கவே பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து நீ – கிஞ்சிதமும்

Kinjithamum Nenjae Anjidathae – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே Lyrics in English

Kinjithamum nenjae, anjidaathae – nalla
Kaedakaththaip piti nee – visuvaasak
Kaedakaththaip piti nee

Anupallavi

Vanjanaiyaakavae paey ethirththuntanai
Vannik kannaithoduth theykinta vaelaiyil,
Nenjil padaamal thadukka athu nalla
Nichchayamaana parisai arinthu nee – kinjithamum

Saranangal

1. Paavaththai veraுkka, aapaththaich sakikka,
Paththiyil thelikkavum, – nithya
Jeevanaip pitikka, lokaththai jeyikka,
Thiramai alikkavum,
Saavae un koor engae? Paathaalamae, un
Jeyam engae? Entu nee koovik kalikkavum,
Dhevan ukanthunaith thaan angaீkarikka,
Seyyavumae athu thivya nal aayutham – kinjithamum

2. Panntaiyar anthap parisaiyinaal allo,
Kanndatainthaar paeraு? – nalla
Thonndan aapael muthalaana vaitheekaraith
Thokuththu vevvaeraு
Vinnduraikkil perukum thee annaiththathum,
Veeriya singaththin vaayai ataiththathum,
Kanntithamaay vetti konndathu maampala
Kaariyangalaiyum paar ithu maa jeyam – kinjithamum

3. Oottamudan ipparisaip pitiththida
Un seyal maa paetham – athin
Thottamum mutivum aesuparan seyal,
Thunnai avar paatham
Aettara vannaikkavae pannivaaka
Iranthu mantati avar moolamaakavae,
Aattal sey thaettaravaali Parisuththa
Aavi uthaviyai maevi, atainthu nee – kinjithamum

PowerPoint Presentation Slides for the song Kinjithamum Nenjae Anjidathae – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kinjithamum Nenjae Anjidathae – கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே PPT
Kinjithamum Nenjae Anjidathae PPT

கிஞ்சிதமும் நல்ல கேடகத்தைப் பிடி எங்கே ஜெயம் மா செயல் நெஞ்சே அஞ்சிடாதே விசுவாசக் அனுபல்லவி வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில் தமிழ்