Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthavae En Balanae - கர்த்தாவே என் பெலனே

பல்லவி

கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூடுவேன்
உத்தமமானதும் வழிதானே

சரணங்கள்

1. என் கன்மலையும் என் கோட்டையும்
என் ரட்சகரும் என் தேவனும்
என் கேடகமும் ரட்சண்யக் கொம்பும்
என் உயர்ந்த அடைக்கலமானவர் – கர்த்தாவே

2. மரணக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது
துர்ச்சன ப்ரவாகம் பயப்படுத்தினது
பாதாளக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது
மரணக் கண்ணிகளென் மேல் விழுந்தது – கர்த்தாவே

3. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்
பாதங்களின் கீழ் இருள் இருந்தது
கேரூபீன் மேலேறி வேகமாய்ச் சென்றார்
காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார் – கர்த்தாவே

4. இருளை தமக்கு மறைவிடமாக்கி
மேகங்களைக் கூடாரமாக்கினார்
வானங்களில் கர்த்தர் குமுறினார்
தமது சத்தத்தைக் தொனிக்கப்பண்ணினார் – கர்த்தாவே

5. தயவுள்ளவனுக்குத் தயவுள்ளவரே
உத்தமனுக்கு நீர் உத்தமரே
புனிதனுக்கு நீர் புனிதரானவரே
மாறுகிறவனுக்கு நீர் மாறுகிறவரே – கர்த்தாவே

6. சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்
மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்
இருளை நீர் வெளிச்சமாக்குவீர் – கர்த்தாவே

7. உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
தம்மாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன்
நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன் – கர்த்தாவே

கர்த்தாவே என் பெலனே -Karthavae En Balanae Lyrics in English

Pallavi karththaavae en pelanae ummil anpu kooduvaen uththamamaanathum valithaanae saranangal 1. En kanmalaiyum en kottaைyum en ratchakarum en thaevanum en kaedakamum ratchannyak kompum en uyarntha ataikkalamaanavar – karththaavae 2. Maranak kattukal soolnthu konndathu thurchchana pravaakam payappaduththinathu paathaalak kattukal soolnthu konndathu maranak kannnnikalen mael vilunthathu – karththaavae 3. Vaanangalaith thaalththi iranginaar paathangalin geel irul irunthathu kaeroopeen maelaeri vaekamaaych sentar kaattin settaைkalaik konndu paranthaar – karththaavae 4. Irulai thamakku maraividamaakki maekangalaik koodaaramaakkinaar vaanangalil Karththar kumurinaar thamathu saththaththaik thonikkappannnninaar – karththaavae 5. Thayavullavanukkuth thayavullavarae uththamanukku neer uththamarae punithanukku neer punitharaanavarae maaraுkiravanukku neer maaraுkiravarae – karththaavae 6. Siraுmaippatta janaththai ratchippeer maettimaiyaana kannkalaith thaalththuveer thaevareer en vilakkai aettaுveer irulai neer velichchamaakkuveer – karththaavae 7. Ummaalae oru senaikkul paayvaen thammaalae oru mathilaith thaannduvaen saththuruvai naan thodarnthu pitippaen nirmoolamaakkum varaikkum thirumpaen – karththaavae

PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே என் பெலனே -Karthavae En Balanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthavae En Balanae – கர்த்தாவே என் பெலனே PPT
Karthavae En Balanae PPT

கர்த்தாவே நீர் மரணக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது இருளை பல்லவி பெலனே உம்மில் அன்பு கூடுவேன் உத்தமமானதும் வழிதானே சரணங்கள் கன்மலையும் கோட்டையும் ரட்சகரும் தேவனும் தமிழ்