Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthar Thamae Karthar Thamae - கர்த்தர் தாமே கர்த்தர் தாமே

Karthar Thamae Karthar Thamae
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
நம் பட்சத்தில் நிற்பதால்
சத்ரு வெள்ளம்போல் வந்தாலும்
பத்திரமாய் நிற்கின்றோம்

நம்மை நம்பி, பிறரை நம்பி
நாம் நடந்தால் விம்முவோம்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம்

1. மனித வாழ்க்கை கண்ணீர் என்பார்
உலகில் அநேகர் உண்டல்லோ
கர்த்தரின் துணை அறியார் கூறும்
மன வருத்தம் அதுவல்லோ
துன்பம், துக்கம், சூழ்ச்சி, சதிகள்
எதுவென்றாலும் வெல்லுவோம்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர்

2. இம்மட்டுமாய் நடத்தும் கர்த்தர்
இனிமேலும் உன்னை நடத்தாரோ
கர்த்தரில் நீ மனம் பதித்து
நிதம் நடந்தால் நடத்தாரோ
மன கஷ்டங்கள், பண கஷ்டங்கள்
வியாதி, தோல்வி வந்தாலும்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர்

3. என் உள்ளத்தில் என் உள்ளத்தில்
வாசம் செய்யும் கர்த்தாவே
இயேசுவில் நான் நேசம் கொண்டு
வளரச் செய்யும் கர்த்தாவே
கறைகள் இன்றி, குறைகள் இன்றி
உலகை கடக்கச் செய்திடும்
கர்த்தர் தாமே கர்த்தர் தாமே
துணைக்கு நின்றால் வெல்லுவோம் – கர்த்தர்

Karthar Thamae Karthar Thamae Lyrics in English

Karthar Thamae Karthar Thamae Karththar thaamae Karththar thaamae nam patchaththil nirpathaal sathru vellampol vanthaalum paththiramaay nirkintom nammai nampi, pirarai nampi naam nadanthaal vimmuvom Karththar thaamae Karththar thaamae thunnaikku nintal velluvom 1. Manitha vaalkkai kannnneer enpaar ulakil anaekar unndallo karththarin thunnai ariyaar kooraுm mana varuththam athuvallo thunpam, thukkam, soolchchi, sathikal ethuventalum velluvom Karththar thaamae Karththar thaamae thunnaikku nintal velluvom – Karththar 2. Immattumaay nadaththum Karththar inimaelum unnai nadaththaaro karththaril nee manam pathiththu nitham nadanthaal nadaththaaro mana kashdangal, pana kashdangal viyaathi, tholvi vanthaalum Karththar thaamae Karththar thaamae thunnaikku nintal velluvom – Karththar 3. En ullaththil en ullaththil vaasam seyyum karththaavae Yesuvil naan naesam konndu valarach seyyum karththaavae karaikal inti, kuraikal inti ulakai kadakkach seythidum Karththar thaamae Karththar thaamae thunnaikku nintal velluvom – Karththar

PowerPoint Presentation Slides for the song Karthar Thamae Karthar Thamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Thamae Karthar Thamae – கர்த்தர் தாமே கர்த்தர் தாமே PPT
Karthar Thamae Karthar Thamae PPT

கர்த்தர் தாமே தாமேதுணைக்கு நின்றால் வெல்லுவோம் Karthar நடந்தால் செய்யும் Thamae Thamaeகர்த்தர் தாமேநம் பட்சத்தில் நிற்பதால்சத்ரு வெள்ளம்போல் வந்தாலும்பத்திரமாய் நிற்கின்றோம் நம்மை நம்பி தமிழ்