Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Karthaavai Nambuvorai - கர்த்தாவை நம்புவோரை

1.கர்த்தாவை நம்புவோரை
ஓர்க்காலும் கைவிடார்,
பொல்லாரின் சீறுமாற்றை
வீணாக்கிப் போடுவார்;
சன்மார்க்கரைப் பலத்த
கையால் தயாபரர்
ரட்சித்துத் தாழ்ச்சியற்ற
அன்பாய் விசாரிப்பார்.

2.கர்த்தாவின் சித்தத்துக்கு
கீழ்ப்பட்டடங்குவேன்;
அப்போ நான் ஜீவனுக்கு
நேரே நடக்கிறேன்;
லௌகீக வாழ்வின் பாதை
வேண்டாம், நான் இயேசுவை
பின்பற்றி, இங்கே வாதை
சகித்தால், மாநன்மை.

3. என்மேலே பாரமாக
வரும் இக்கட்டிலே
பராபரன் அன்பாக
என்னோடிருப்பாரே;
பொறுக்கிற வரத்தை
அவரிடம் கேட்பேன்,
அவ்விதமாய் இக்கட்டை
சகித்து வெல்லுவென்.

4. கசப்பும் கர்த்தராலே
வரும், நான் பின்வாங்கேன்;
ஜெபத்தில் ஆசையோடே
விண்ணப்பம் பண்ணுவேன்;
அப்போது தயவாக
காப்பாரே, கைவிடார்;
இக்கட்டு பெரிதாக
போம்போது தேற்றுவார்.

5.அநேகர் ஆசைகொள்ளும்
பொருளை வாஞ்சியேன்;
கர்த்தாவின் வார்த்தை சொல்லும்
மெய்ப்பொருள் நாடுவேன்;
என் பொக்கிஷம், என் செல்வம்,
என் ஆஸ்த்தி கிறிஸ்துவே;
என் பாக்கியம், பேரின்பம்,
எல்லாம் என் மீட்பரே.

6.என் இயேசுவை நான் பற்றி
தொடர்வேன் ஆவலாய்;
என் சாபத்தை அகற்றி
ரட்சித்தார் நேசமாய்;
நான் தப்ப எனக்காக
தம் ரத்தம் சிந்தினார்;

Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை Lyrics in English

1.karththaavai nampuvorai
Orkkaalum kaividaar,
Pollaarin seeraுmaattaை
Veennaakkip poduvaar;
Sanmaarkkaraip palaththa
Kaiyaal thayaaparar
Ratchiththuth thaalchchiyatta
Anpaay visaarippaar.

2.karththaavin siththaththukku
Geelppattadanguvaen;
Appo naan jeevanukku
Naerae nadakkiraேn;
Laugeeka vaalvin paathai
Vaenndaam, naan Yesuvai
Pinpatti, ingae vaathai
Sakiththaal, maananmai.

3. Enmaelae paaramaaka
Varum ikkattilae
Paraaparan anpaaka
Ennotiruppaarae;
Poraுkkira varaththai
Avaridam kaetpaen,
Avvithamaay ikkattaை
Sakiththu velluven.

4. Kasappum karththaraalae
Varum, naan pinvaangaen;
Jepaththil aasaiyotae
Vinnnappam pannnuvaen;
Appothu thayavaaka
Kaappaarae, kaividaar;
Ikkattu perithaaka
Pompothu thaettaுvaar.

5.anaekar aasaikollum
Porulai vaanjiyaen;
Karththaavin vaarththai sollum
Meypporul naaduvaen;
En pokkisham, en selvam,
En aasththi Kristhuvae;
En paakkiyam, paerinpam,
Ellaam en meetparae.

6.en Yesuvai naan patti
Thodarvaen aavalaay;
En saapaththai akatti
Ratchiththaar naesamaay;
Naan thappa enakkaaka
Tham raththam sinthinaar;

PowerPoint Presentation Slides for the song Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை PPT
Karthaavai Nambuvorai PPT

கைவிடார் கர்த்தாவின் இயேசுவை கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் பொல்லாரின் சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார் சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத் தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார் சித்தத்துக்கு தமிழ்