Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalvariye Kalvariye Kal Manam - கல்வாரியே கல்வாரியே

கல்வாரியே கல்வாரியே
கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த – கல்வாரியே

2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத – கல்வாரியே

3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும் – கல்வாரியே

4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும் – கல்வாரியே

5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ – கல்வாரியே

6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா – கல்வாரியே

7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன் – கல்வாரியே

Kalvariye Kalvariye Kal Manam Lyrics in English

Kalvaariyae kalvaariyae kal manam urukkidum kalvaariyae – en 1. Paavi thuroki sanndaalan naanaayinum paathakam pokkip parivudan iratchiththa – kalvaariyae 2. Paaviyai meetkavae naayakan Yesu tham jeevanin iraththaththaich sinthina unnatha – kalvaariyae 3. Naathan enakkaaka aatharavattaோraayp paathakar maththiyil paathakan pol thongum – kalvaariyae 4. Mulmuti sootiyae koor aanni meethilae kallanai pola en naayakan thongidum – kalvaariyae 5. Sarvam pataiththaalum sorloka naayakan karmaththin kolamaay nirpathaik kaannpaeno – kalvaariyae 6. Ennnum nanmai aethum ennilae illaiyae pinnai aen naesiththeer ennai en pon naathaa – kalvaariyae 7. Ivvitha anpai naan engumae kaanneenae evvitham ithargeedu aelai naan seykuvaen – kalvaariyae

PowerPoint Presentation Slides for the song Kalvariye Kalvariye Kal Manam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvariye Kalvariye Kal Manam – கல்வாரியே கல்வாரியே PPT
Kalvariye Kalvariye Kal Manam PPT

கல்வாரியே நாயகன் கல்வாரியேகல் மனம் உருக்கிடும் பாவி துரோகி சண்டாளன் நானாயினும்பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த பாவியை மீட்கவே இயேசு தம்ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின தமிழ்