LYRICS
கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டு
கண்ணீர் பெருகுதையா – அவர்
உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள்
உள்ளத்தை உடைக்குதையா
சரணங்கள்
1. இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்
இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2
பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமே
பாதகர்க்காய் வேண்டினார் -2
2.காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிட
களைந்த நிலையில் கர்த்தர் -2
பார்த்துமே கள்வனை இன்று என்னுடனே
பரதேசில் இருபாய் என்றார்-2
3. சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்
சீராளன் தாயைப் பார்த்தார் – 2
பாசக் கண்களோடு பார்த்துமே யோவனை
பார் உந்தன் தாயை என்றார் -2
4. என் தேவனே என் தேவனே ஏன் என்னைக்
கைவிட்டீர் என்றுரைத்தார் – 2
தாகமாய் இருக்கிறேன் என்றவர் கூறவே
சேவகன் காடி கொடுத்தான் – 2
5. எல்லாம் முடிந்தது என்று சத்தமிட்டார்
பொல்லாதார் மீட்படைய -2
உம்முடையக் கைகளில் எந்தன் ஆவியை
ஒப்பு விக்கின்றேன் என்றார் – 2
கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar Lyrics in English
LYRICS kalvaari malaithanilae Karththar siluvaik kanndu kannnneer perukuthaiyaa – avar uyara siluvaiyil uraiththa pon vaarththaikal ullaththai utaikkuthaiyaa saranangal 1. Innilaththil thammaik kolai seyvaaraiyum irangi mannippaar unntoo – 2 pithaavae ivarkatku manniyum entumae paathakarkkaay vaenntinaar -2 2.kaayangal raththaththai kotta kann mangida kalaintha nilaiyil Karththar -2 paarththumae kalvanai intu ennudanae parathaesil irupaay entar-2 3. Sinthum raththavella siluvaiyil thongidum seeraalan thaayaip paarththaar – 2 paasak kannkalodu paarththumae yovanai paar unthan thaayai entar -2 4. En thaevanae en thaevanae aen ennaik kaivittir enturaiththaar – 2 thaakamaay irukkiraேn entavar kooravae sevakan kaati koduththaan – 2 5. Ellaam mutinthathu entu saththamittar pollaathaar meetpataiya -2 ummutaiyak kaikalil enthan aaviyai oppu vikkinten entar – 2
PowerPoint Presentation Slides for the song கல்வாரி மலைதனிலே கர்த்தர் -Kalvari Malaithanile Karthar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalvari Malaithanile Karthar – கல்வாரி மலைதனிலே கர்த்தர் PPT
Kalvari Malaithanile Karthar PPT

