காலமே தேவனைத் தேடு – ஜீவ
காருண்யர் பாதம் பணிந்து மன்றாடு
சீலமுடன் பதம் பாடிக்கொண்டாடு
சீரான நித்திய ஜீவனை நாடு
1.மன்னுயிர்க்காய் மரித்தாரே – மனு
மைந்தனென நாமம் வைத்திருந்தாரே
உன் சிருஷ்டிகரை நீ உதயத்திலெண்ணு
உள்ளங்கனிந்து தனி ஜெபம் பண்ணு
2.பாவச் சோதனைகளை வெல்லு – கெட்ட
பாருடல் பேயுடன் போருக்கு நில்லு
ஜீவ கிரீடஞ் சிரத்திலணியச்
சிந்தனை செய் மனுவேலனைப் பணிய
3. சிறுவர்கள் என்னிடஞ் சேரத்தடை
செய்யாதிருங்களென்றார் மனதார
பரலோக செல்வமவர்க்குப் பலிக்கும்
பாக்கியமெல்லாம் பரந்து ஜொலிக்கும்
4. வேலையுனக்குக் கைகூட – சத்ய
வேதன் கிருபை வரத்தை மன்றாட
காலை தேடுவோர் எனைக் கண்டடைவாரே
கண்விழித்து ஜெபஞ் செய்யுமென்றாரே
Kaalamae Thaevanaith Thaetu Lyrics in English
Kaalamae thaevanaith thaedu – jeeva kaarunnyar paatham panninthu mantadu seelamudan patham paatikkonndaadu seeraana niththiya jeevanai naadu 1.mannuyirkkaay mariththaarae – manu mainthanena naamam vaiththirunthaarae un sirushtikarai nee uthayaththilennnu ullanganinthu thani Jebam pannnu 2.paavach sothanaikalai vellu – ketta paarudal paeyudan porukku nillu jeeva kireedanj siraththilanniyach sinthanai sey manuvaelanaip panniya 3. Siraுvarkal ennidanj seraththatai seyyaathirungalentar manathaara paraloka selvamavarkkup palikkum paakkiyamellaam paranthu jolikkum 4. vaelaiyunakkuk kaikooda – sathya vaethan kirupai varaththai mantada kaalai thaeduvor enaik kanndataivaarae kannviliththu jepanj seyyumentarae
PowerPoint Presentation Slides for the song Kaalamae Thaevanaith Thaetu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalamae Thaevanaith Thaetu – காலமே தேவனைத் தேடு ஜீவ PPT
Kaalamae Thaevanaith Thaetu PPT

