ஐயையோ நான் என்ன செய்வேன் – Aiyyaiyo Naan Enna Seivean
ஐயையோ நான் என்ன செய்வேன்
அங்கம் பதைத்தேங்குதையா
அனுபல்லவி
மெய்யாய் எந்தன் பாவத்தாலே
மேசியா வதைக்குள்ளானார்
1. முண்முடி சிரசில் வைத்து
மூங்கில் தடியாலடித்த
சண்டாளர் செய்கையை எண்ண
சகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ
2. பெற்ற தாயார் அலறி வீழ
பிரிய சீஷர் பதறி ஓட
செற்றலர் திரண்டு சூழ
தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ
3. கால் தளர்ந்து போச்சுதையா
கைகள் சோர்ந்து வீழுதையா
சேல்விழிகள் மங்குதையா
தேவே எந்தன் பாவமல்லோ – ஐயையோ
4. நா வறண்டு நடை தள்ளாட
நண்பர் கண்டு கதறி வாட
ஜீவ இம்சையே மேலாட
தேவே கொல்கதாவில் நீட – ஐயையோ
5. சிலுவை தன்னைப் பாட்டிலிட்டு
தேவே உம்மை மேல் கிடத்தி
வலுவாய் கை கால்களை இழுத்து
மாட்டினாரோ ஆணியிட்டு – ஐயையோ
6. துடிக்குதே உன் அங்கமெல்லாம்
சோர்வடைய உந்தனாவி
வெடிக்குதுந்தன் இடது விலா,
விரனீட்டியாலே குத்த – ஐயையோ
7. இந்தக் கஷ்டம் நீர் சகிக்க
வந்ததெந்தன் பாவமல்லால்
உந்தன் குற்றம் யாதுமில்லை
எந்தையே நீரே என் தஞ்சம் – ஐயையோ
Iyyaiyo Naan Enna Seivean – ஐயையோ நான் என்ன செய்வேன் Lyrics in English
Aiyaiyo naan enna seyvaen – Aiyyaiyo Naan Enna Seivean aiyaiyo naan enna seyvaen angam pathaiththaenguthaiyaa anupallavi meyyaay enthan paavaththaalae maesiyaa vathaikkullaanaar 1. Munnmuti sirasil vaiththu moongil thatiyaalatiththa sanndaalar seykaiyai ennna sakikkuthillai enthanullam – aiyaiyo 2. Petta thaayaar alari veela piriya seeshar pathari oda settalar thiranndu soola thaevae, inthak kashdam aeno? – aiyaiyo 3. Kaal thalarnthu pochchuthaiyaa kaikal sornthu veeluthaiyaa selvilikal manguthaiyaa thaevae enthan paavamallo – aiyaiyo 4. Naa varanndu natai thallaada nannpar kanndu kathari vaada jeeva imsaiyae maelaada thaevae kolkathaavil needa – aiyaiyo 5. Siluvai thannaip paattilittu thaevae ummai mael kidaththi valuvaay kai kaalkalai iluththu maattinaaro aanniyittu – aiyaiyo 6. Thutikkuthae un angamellaam sorvataiya unthanaavi vetikkuthunthan idathu vilaa, viraneettiyaalae kuththa – aiyaiyo 7. Inthak kashdam neer sakikka vanthathenthan paavamallaal unthan kuttam yaathumillai enthaiyae neerae en thanjam – aiyaiyo
PowerPoint Presentation Slides for the song Iyyaiyo Naan Enna Seivean – ஐயையோ நான் என்ன செய்வேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyyaiyo Naan Enna Seivean – ஐயையோ நான் என்ன செய்வேன் PPT
Iyyaiyo Naan Enna Seivean PPT

