Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intrai Dhinam Un Arul - இன்றைத்தினம் உன் அருள்

பல்லவி

இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

அனுபல்லவி

அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. – இன்

சரணங்கள்

1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்
பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;
ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,
ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். – இன்றை

2. கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்
கடைக்கண் ணோக்கி, அவற்றின் மேலே,
ஐயா நின் ஆசீர்வாதம் அருளி, என் மனோவாக்கு
மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக. – இன்றை

3. எத்தனையோ விபத்தோர் நாளே;-தஞ்சம் நீ என
எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே;
பத்தர் பாலனா, எனைப் பண்பாய் ஒப்புவித்தேன், உன்
சித்தம் எனது பாக்கியம், தேவ திருக்குமாரா. – இன்றை

4. பாவ சோதனைகளை வென்று, பேயுலகுடல்
பண்ணும் போர்களுக் கெதிர் நின்று,
ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல
தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து. – இன்றை

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள் Lyrics in English

Pallavi intaiththinam un arul eekuvaay, Yesunaathaiyaa; intaiththinam un arul eekuvaay anupallavi antun uthiram narark kentu sinthi meettenai ventiyudan ratchiththa nanti polae enakku. – in saranangal 1. Pona raavil ennaik kann paarththaay,-palavithamaam pollaa mosangalil tharkaaththaay; eena saaththaan enaiyae idarkkul akappaduththi, oonam enakkuch seyyaa thurukkamudan puranthaay. – intai 2. Kaiyittuk kollum entan vaelai-yaavilumuntan kataikkann nnokki, avattin maelae, aiyaa nin aaseervaatham aruli, en manovaakku meyyaal nin makimaiyae vilangumpati oluka. – intai 3. Eththanaiyo vipaththor naalae;-thanjam nee ena eliyaen atainthaen untan thaalae; paththar paalanaa, enaip pannpaay oppuviththaen, un siththam enathu paakkiyam, thaeva thirukkumaaraa. – intai 4. Paava sothanaikalai ventu, paeyulakudal pannnum porkaluk kethir nintu, jeeva paathaiyil intum thidanaay munnittuch sella thaeva sarvaayuthaththaich sirakka enak kaliththu. – intai

PowerPoint Presentation Slides for the song Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள் PPT
Intrai Dhinam Un Arul PPT

இன்றை இன்றைத்தினம் அருள் ஈகுவாய் நின் தேவ பல்லவி இயேசுநாதையா அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே தமிழ்