Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Vealayinil Vantharulum - இந்த வேளையினில் வந்தருளும்

சரணங்கள்

1. இந்த வேளையினில் வந்தருளும், தேவ ஆவியே!-இப்போ
எங்கள் மீதிறங்கித், தங்கி வரம் தாரும், ஆவியே.

2. அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய ஆவியே!-முன்
ஆச்சரியமாகக் காட்சி தந்த ஞான ஆவியே.

3. ஆர்ச்சியர்க் கந்நாளில் அற்புதம் செய்தாண்ட ஆவியே!-இந்த
ஆதிரை மீதினில் தீதகற்றியாளும், ஆவியே.

4. ஆருமறியாத ஆறுதல் செய்திடும் ஆவியே!-இங்கு
அஞ்ஞானம் அகற்றி, மெய்ஞ்ஞானம் புகட்டும், ஆவியே

5. சித்தம் இரங்காயோ, நித்தியராகிய ஆவியே!-அருள்
ஜீவ வழி காட்டிப் பாவம் அகற்றிடும், ஆவியே.

6. வாரும், வாரும்; கண் பாரும், பரிசுத்த ஆவியே!-இன்று
வந்து சபை மீதில் சிந்தை வைத்தருளும், ஆவியே.

7. தேற்றரவாளன் என்றேற்றிப் புகழ்ந்திடும் ஆவியே!-நிதம்
சித்தம் வைத்தென் மீதில் முற்றிலும் காத்திடும், ஆவியே.

Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும் Lyrics in English

Saranangal 1. Intha vaelaiyinil vantharulum, thaeva aaviyae!-ippo engal meethirangith, thangi varam thaarum, aaviyae. 2. Anthanar thammidam vinthai seytha sathya aaviyae!-mun aachchariyamaakak kaatchi thantha njaana aaviyae. 3. Aarchchiyark kannaalil arputham seythaannda aaviyae!-intha aathirai meethinil theethakattiyaalum, aaviyae. 4. Aarumariyaatha aaraுthal seythidum aaviyae!-ingu anjnjaanam akatti, meynjnjaanam pukattum, aaviyae 5. Siththam irangaayo, niththiyaraakiya aaviyae!-arul jeeva vali kaattip paavam akattidum, aaviyae. 6. Vaarum, vaarum; kann paarum, Parisuththa aaviyae!-intu vanthu Sabai meethil sinthai vaiththarulum, aaviyae. 7. Thaettaravaalan entettip pukalnthidum aaviyae!-nitham siththam vaiththen meethil muttilum kaaththidum, aaviyae.

PowerPoint Presentation Slides for the song Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Vealayinil Vantharulum – இந்த வேளையினில் வந்தருளும் PPT
Intha Vealayinil Vantharulum PPT

ஆவியே சித்தம் வாரும் மீதில் சரணங்கள் வேளையினில் வந்தருளும் தேவ ஆவியேஇப்போ எங்கள் மீதிறங்கித் தங்கி வரம் தாரும் அந்தணர் தம்மிடம் விந்தை செய்த சத்ய தமிழ்