Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Intha Mangalam Selikkavae - இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும்

இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும்
எங்கள் திரித்துவ தேவனே
சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை
கந்தரசமாகச் செய்த விந்தை போல், இங்கேயும் வந்து

1. ஆதித்தொடுத் தன்பை எடுத்தாய் மனுடர்தம்மை
ஆணும் பெண்ணுமாகப் படைத்தாய்
நீதி வரம் நாலுங்கொடுத்தாய் – பெற்றுப் பெறுகி
நிற்க உலகத்தில் விடுத்தாய்
மாதவா் பணியும் வேத போதனே அந்தப்படி உன்
ஆதரவைக் கொண்டு அதன் நீதியை நம்பிப்புரிந்த

2. தக்க ஆபிரகாமும் விண்டனன் – அதனை மன
துக்குள் எலியேசா் கொண்டனன்
முக்ய ஆரான் நிலத்தண்டினன் – நினைத்தபடி
சக்கியமதாகக் கண்டனன்
பக்குவம் உரைத்திடா ரெபேக்காளும் ஈசாக்குவுக்கு
தக்க மணவாளியாகத் தந்து தயை செய்தாற்போல

3. சத்திய வேதத்தின் வாசனே – அருளுபரி
சுத்த சுவிசேட நேசனே
பக்தர்கள் பவ விமோசனே – பழுதணுவும்
அற்ற கிறிஸ்தேசுராஜனே
வெற்றியால் யாக்கோபுவுக்கு முற்றிலும் அளித்த பேறாய்
புத்திர சம்பந்துண்டாக்கி நித்திய சுப சோபனமாய்

Intha Mangalam Selikkavae Lyrics in English

Intha mangalam selikkavae – kirupai seyyum engal thiriththuva thaevanae suntharak kaanaavin manappanthalil sentam manaththai kantharasamaakach seytha vinthai pol, ingaeyum vanthu 1. Aathiththoduth thanpai eduththaay manudarthammai aanum pennnumaakap pataiththaay neethi varam naalungaொduththaay – pettaுp peraுki nirka ulakaththil viduththaay maathavaa் panniyum vaetha pothanae anthappati un aatharavaik konndu athan neethiyai nampippurintha 2. Thakka aapirakaamum vinndanan – athanai mana thukkul eliyaesaa் konndanan mukya aaraan nilaththanntinan – ninaiththapati sakkiyamathaakak kanndanan pakkuvam uraiththidaa repaekkaalum eesaakkuvukku thakka manavaaliyaakath thanthu thayai seythaarpola 3. Saththiya vaethaththin vaasanae – arulupari suththa suviseda naesanae paktharkal pava vimosanae – paluthanuvum atta kiristhaesuraajanae vettiyaal yaakkopuvukku muttilum aliththa paeraay puththira sampanthunndaakki niththiya supa sopanamaay

PowerPoint Presentation Slides for the song Intha Mangalam Selikkavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Intha Mangalam Selikkavae – இந்த மங்களம் செழிக்கவே கிருபை செய்யும் PPT
Intha Mangalam Selikkavae PPT

தக்க மங்களம் செழிக்கவே கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை இங்கேயும் ஆதித்தொடுத் தமிழ்