🏠  Lyrics  Chords  Bible 

Ilangar Neasaa Anbarae - இளைஞர் நேசா அன்பரே

1. இளைஞர் நேசா, அன்பரே,
அடியேனை உம் சொந்தமாய்
படைத்திட சமூலமாய்,
ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன்.

2. இளமைக் காலை என்னையே
படைப்பேன் வாக்குப்படியே,
பின்வையேன் ஒன்றும் – இப்போதே
பூரண ஆவலாய் வந்தேன்.

3. ஒளியில் என்றும் ஜீவிப்பேன்
நீதிக்காய் என்றும் உழைப்பேன்
முழுபலத்தால் சேவிப்பேன்
உம்மண்டை ஆதலால் வந்தேன்.

4. சிறியேன் திடகாத்திரன்;
சத்தியம், நீதி, உமக்காய்
ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்;
ஜீவாதிபதி – நான் வந்தேன்.

5. பொன், புகழ், சித்தி, இன்பமும்
மேன்மையாய்த் தோன்றும் – ஆயினும்
விஸ்வாசமே மேல் நாட்டமாய்
ஜீவநாள் முற்றிலும் – வந்தேன்.

6. உமக்காய் மேன்மை யடைய,
ஜெயித்து கிரீடம் சூடிட,
பணிந்தும் பாதம் படைக்க,
ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன்.

Ilangar Neasaa Anbarae – இளைஞர் நேசா அன்பரே Lyrics in English

1. Ilainjar naesaa, anparae,
Atiyaenai um sonthamaay
Pataiththida samoolamaay,
Aanndavaa, karththaa – naan vanthaen.

2. Ilamaik kaalai ennaiyae
Pataippaen vaakkuppatiyae,
Pinvaiyaen ontum – ippothae
Poorana aavalaay vanthaen.

3. Oliyil entum jeevippaen
Neethikkaay entum ulaippaen
Mulupalaththaal sevippaen
Ummanntai aathalaal vanthaen.

4. Siriyaen thidakaaththiran;
Saththiyam, neethi, umakkaay
Jeevippaen nalluththamanaay;
Jeevaathipathi – naan vanthaen.

5. Pon, pukal, siththi, inpamum
Maenmaiyaayth thontum – aayinum
Visvaasamae mael naattamaay
Jeevanaal muttilum – vanthaen.

6. Umakkaay maenmai yataiya,
Jeyiththu kireedam sootida,
Panninthum paatham pataikka,
Aanndavaa, karththaa – naan vanthaen.

PowerPoint Presentation Slides for the song Ilangar Neasaa Anbarae – இளைஞர் நேசா அன்பரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ilangar Neasaa Anbarae PPT
Ilangar Neasaa Anbarae PPT

வந்தேன் ஆண்டவா கர்த்தா ஜீவிப்பேன் உமக்காய் இளைஞர் நேசா அன்பரே அடியேனை உம் சொந்தமாய் படைத்திட சமூலமாய் இளமைக் காலை என்னையே படைப்பேன் வாக்குப்படியே பின்வையேன் தமிழ்