பல்லவி
எத்தனை நாவால் துதிப்பேன் – ஏதும்
அற்ற மா பாவி நான் பெற்ற கிருபைக்காய்!
அனுபல்லவி
பித்தனாம் பேயின் அடிமைத்தனத்தில்
பிடிபட்ட பாவியை மீட்டதற்காக
சரணங்கள்
1. பாவத்தில் ஜனிப்பிக்கப்பட்டேன் – பின்னும்
பலவித ஆங்காரங் கொண்டு நடந்தேன்;
ஆபத்தில் பலமுறை அகப்பட்ட பாவியை
அழித்துப்போடாமலே வைத்ததற்காக – எத்தனை
2. குடிவெறி களியாட்டுச் செய்தேன் – வாயால்
கோட் சொல்லிக் கோபங்கள் மூட்டியே விட்டேன்
அடியேனை மீட்பதற்காகவே இயேசு
அற்புத நாதரைக் கொடுத்ததற்காக – எத்தனை
3. பாதகரோடு சஞ்சரித்தேன் – நாவால்
பரியாசம் பண்ணியே நாட்களைக் கெடுத்தேனே;
தீதான பாதகர் கூட்டத்தை விட்டு
தேவதாசர்களோடு சேர்த்ததற்காக – எத்தனை
4. உலகத்தைப் பலகாலஞ் சுமந்தேன் – பின்னும்
உறவின் முறையாரைச் சிலகாலஞ் சுமந்தேன்
அலகைப்பயல் போட்ட வலை யாதென்றுணர
அடியேனுக்காவியின் அருள்வரம் கொடுத்தீர் – எத்தனை
5. பதினோராம் மணி நேரம் மட்டும் – கெட்ட
பாவி நான் பாவத்தில் தூங்கிக்கிடந்தேன்;
எதிரொலி ஓசைபோல் மனந்திரும்பென்ற
எக்காள சத்தத்தைக் கேட்டு எழுந்த நான் – எத்தனை
Ethanai Naavaal Thuthipean Yethum – எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் Lyrics in English
Pallavi eththanai naavaal thuthippaen – aethum atta maa paavi naan petta kirupaikkaay! Anupallavi piththanaam paeyin atimaiththanaththil pitipatta paaviyai meettatharkaaka saranangal 1. Paavaththil janippikkappattaேn – pinnum palavitha aangaarang konndu nadanthaen; aapaththil palamurai akappatta paaviyai aliththuppodaamalae vaiththatharkaaka – eththanai 2. Kutiveri kaliyaattuch seythaen – vaayaal kot sollik kopangal moottiyae vittaேn atiyaenai meetpatharkaakavae Yesu arputha naatharaik koduththatharkaaka – eththanai 3. Paathakarodu sanjariththaen – naavaal pariyaasam pannnniyae naatkalaik keduththaenae; theethaana paathakar koottaththai vittu thaevathaasarkalodu serththatharkaaka – eththanai 4. Ulakaththaip palakaalanj sumanthaen – pinnum uravin muraiyaaraich silakaalanj sumanthaen alakaippayal potta valai yaathentunara atiyaenukkaaviyin arulvaram koduththeer – eththanai 5. Pathinoraam manni naeram mattum – ketta paavi naan paavaththil thoongikkidanthaen; ethiroli osaipol mananthirumpenta ekkaala saththaththaik kaettu eluntha naan – eththanai
PowerPoint Presentation Slides for the song Ethanai Naavaal Thuthipean Yethum – எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethanai Naavaal Thuthipean Yethum – எத்தனை நாவால் துதிப்பேன் ஏதும் PPT
Ethanai Naavaal Thuthipean Yethum PPT

