Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enthan Sampathentru Sollavae - எந்தன் சம்பத்தென்று சொல்லவே

பல்லவி

எந்தன் சம்பத்தென்று சொல்லவே – வேறொன் றில்லையே
இயேசு மாத்திரம் சம்பத்தாவாரே!

அனுபல்லவி

சாவை வென்று உயிர்த்தெழுந்தார் – வான லோகமதிற் சென்றார்
பாவியாம் எனக்காய் என்றும் தாதையுடன் யாசிக்கின்றார்

சரணங்கள்

1. குருசிலெனக்காய் மரித்தாரே – க்ரூரவதையாய்
சொர்க்க கானான் சேர்க்கவெனையே
பாவம் நீக்கி சாபம் மாற்றி, சாவின் மேலும் ஜெயம் நல்கி
வேகம் வாறே னென்றுருதி வார்த்தை கூறி ஏறிச் சென்றார் – எந்தன்

2. இயேசுவுக்காய் சர்வ சம்பத்தும் யாகமாய் வைத்து
என்றென்றும் அவரில் நேசமாய்,
இயேசுவுக்காய் வேலை செய்து என் சிலுவையை எடுத்து
பிராண நாதர் சேவையில் என்னாயுளெல்லாம் கழிப்பேனே – எந்தன்

3. உத்தம ஊழியன் என்னும் நான் – அத்தன் முன்பாக
எத்தகைய வெட்கமின்றியே;
பக்தியோடென் அன்பர் முன்பில் ஆனந்த புஷ்பஞ் சொரியும்
பாக்யமேறும் மகோற்சவ வாழ்வுகாலம் வந்திட்டதே – எந்தன்

4. ஆட்டுக்குட்டியாமென் நேசரின் – சாலேம் நகரின்
நாட்டமுரும் வாசம் திட்டமாம்!
லோகமென்னைக் கைவிடினும், தேகம் மெலிந்துருகினும்
துக்கம் சிறிதேனும் கொள்ளேன், இயேசுவையே பின்தொடர்வேன் – எந்தன்

5. எந்தன் தேசம் இப்புவியென்று – அன்யனாம் சாது!
சொந்த தேசம் நாடினேன் நன்று;
திகழுறு சாலேமென்னை மகிழ்வுடன் வரவேற்க
மகிமையாம் வாசல்கள் தம் தலைகளை உயர்த்திடும் – எந்தன்

Enthan Sampathentru Sollavae – எந்தன் சம்பத்தென்று சொல்லவே Lyrics in English

Pallavi

Enthan sampaththentu sollavae – vaeron rillaiyae
Yesu maaththiram sampaththaavaarae!

Anupallavi

Saavai ventu uyirththelunthaar – vaana lokamathir sentar
Paaviyaam enakkaay entum thaathaiyudan yaasikkintar

Saranangal

1. Kurusilenakkaay mariththaarae – krooravathaiyaay
Sorkka kaanaan serkkavenaiyae
Paavam neekki saapam maatti, saavin maelum jeyam nalki
Vaekam vaaraே nenturuthi vaarththai koori aerich sentar – enthan

2. Yesuvukkaay sarva sampaththum yaakamaay vaiththu
Ententum avaril naesamaay,
Yesuvukkaay vaelai seythu en siluvaiyai eduththu
Piraana naathar sevaiyil ennaayulellaam kalippaenae – enthan

3. Uththama ooliyan ennum naan – aththan munpaaka
Eththakaiya vetkamintiyae;
Pakthiyoden anpar munpil aanantha pushpanj soriyum
Paakyamaeraுm makorsava vaalvukaalam vanthittathae – enthan

4. Aattukkuttiyaamen naesarin – saalaem nakarin
Naattamurum vaasam thittamaam!
Lokamennaik kaivitinum, thaekam melinthurukinum
Thukkam sirithaenum kollaen, Yesuvaiyae pinthodarvaen – enthan

5. Enthan thaesam ippuviyentu – anyanaam saathu!
Sontha thaesam naatinaen nantu;
Thikaluraு saalaemennai makilvudan varavaerka
Makimaiyaam vaasalkal tham thalaikalai uyarththidum – enthan

PowerPoint Presentation Slides for the song Enthan Sampathentru Sollavae – எந்தன் சம்பத்தென்று சொல்லவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Sampathentru Sollavae – எந்தன் சம்பத்தென்று சொல்லவே PPT
Enthan Sampathentru Sollavae PPT

எந்தன் சென்றார் இயேசுவுக்காய் தேசம் பல்லவி சம்பத்தென்று சொல்லவே வேறொன் றில்லையே இயேசு மாத்திரம் சம்பத்தாவாரே அனுபல்லவி சாவை வென்று உயிர்த்தெழுந்தார் வான லோகமதிற் பாவியாம் தமிழ்