இயேசு என் அடைக்கலம்
1. எந்தன் ஆத்ம நேசரே வெள்ளம் போன்ற துன்பத்தில்
தாசன் திக்கில்லாமலே தடுமாறிப்போகையில்
தஞ்சம் தந்து இயேசுவே திவ்விய மார்பில் காருமேன்
அப்பால் கரையேற்றியே மோட்ச வீட்டில் சேருமேன்.
2. வல்ல தேவரீர் அல்லால் வேறே தஞ்சம் அறியேன்
கைவிடாமல் நேசத்தால் ஆற்றித் தேற்றித் தாங்குமேன்
நீரே என்தன் நம்பிக்கை நீர் சகாயம் செய்குவீர்
ஏதுமற்ற ஏழையை செட்டையால் மூடுவீர்.
3. குறையாவும் நீக்கிட நாதா நீர் சம்பூரணர்
திக்கற்றோரைத் தாங்கிட நீரே மா தயாபரர்
நான் அசுத்த பாவிதான் நீரோ தூயர் தூயரே
நான் அநீதி கேடுள்ளான் நீர் நிறைந்த நித்தியரே
4. பாவம் யாவும் மன்னிக்க ஆரருள் அமைந்த நீர்
என்னைச் சுத்திகரிக்க அருள் பாயச் செய்குவீர்
ஜீவ ஊற்றாம் இயேசுவே என்தன் தாகம் தீருமேன்
ஸ்வாமீ என்றும் என்னிலே நீர் சுரந்து ஊறுமேன்
Enthan Aathma Naesarae Lyrics in English
Yesu en ataikkalam 1. Enthan aathma naesarae vellam ponta thunpaththil thaasan thikkillaamalae thadumaarippokaiyil thanjam thanthu Yesuvae thivviya maarpil kaarumaen appaal karaiyaettiyae motcha veettil serumaen. 2. Valla thaevareer allaal vaeraே thanjam ariyaen kaividaamal naesaththaal aattith thaettith thaangumaen neerae enthan nampikkai neer sakaayam seykuveer aethumatta aelaiyai settaைyaal mooduveer. 3. Kuraiyaavum neekkida naathaa neer sampooranar thikkattaோraith thaangida neerae maa thayaaparar naan asuththa paavithaan neero thooyar thooyarae naan aneethi kaedullaan neer niraintha niththiyarae 4. Paavam yaavum mannikka aararul amaintha neer ennaich suththikarikka arul paayach seykuveer jeeva oottaாm Yesuvae enthan thaakam theerumaen svaamee entum ennilae neer suranthu ooraுmaen
PowerPoint Presentation Slides for the song Enthan Aathma Naesarae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthan Aathma Naesarae – இயேசு என் அடைக்கலம் PPT
Enthan Aathma Naesarae PPT

