எந்தை எந்தை முந்துந் திருமகன்
நிந்தை நிந்தை உந்தும் புவிதனில்,
விந்தை! விந்தை! மனுவுருவாய்
வந்தனர்; சந்தோடமே!
ஆ! சந்தோஷம்! துதி சொல்லுவோம்;
ஆ! சந்தோஷம்! குதி கொள்ளுவோம்;
ஆ! சந்தோஷம்! கன மகிமை
அவர் என்றும் பெறுகுவரே
வானோ ரானோர், ஞானிகள், இடையர்கள்
கான தான மான பல செயல்
வான மீன நடையொடுமே
மோனம் மிகுதனமே.
தங்கள் சிறுபுல்லணைதனிலே
எங்கண் மணிஅனை அருகினிலே
இங்கிங் கெனவழு கிறகுரலோ!
இது பரன் உறு திறலோ?
துங்கம் துங்கம் துங்கம் நிறை வலு
சிங்கம் சிங்கமு கங்கண் டலகைப
துங்கும் சிங்கும் பங்கமுறும்
மங்கும் மடிவுறுமே.
மாபல சாலிகள் பாலரொடும்
மாகவி பாடுமின் ஆடவரும்
பூவையர் ஆடுவிர் ஆவலொடும்
புவிபுரந் திடுவோர் வந்தார்.
Enthai Enthai Munthun Thirumagan Lyrics in English
enthai enthai munthun thirumakan
ninthai ninthai unthum puvithanil,
vinthai! vinthai! manuvuruvaay
vanthanar; santhodamae!
aa! santhosham! thuthi solluvom;
aa! santhosham! kuthi kolluvom;
aa! santhosham! kana makimai
avar entum perukuvarae
vaano raanor, njaanikal, itaiyarkal
kaana thaana maana pala seyal
vaana meena nataiyodumae
monam mikuthanamae.
thangal sirupullannaithanilae
engann mannianai arukinilae
inging kenavalu kirakuralo!
ithu paran utru thiralo?
thungam thungam thungam nirai valu
singam singamu kangann dalakaipa
thungum singum pangamurum
mangum mativurumae.
maapala saalikal paalarodum
maakavi paadumin aadavarum
poovaiyar aaduvir aavalodum
puvipuran thiduvor vanthaar.
PowerPoint Presentation Slides for the song Enthai Enthai Munthun Thirumagan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enthai Enthai Munthun Thirumagan – எந்தை எந்தை முந்துந் திருமகன் PPT
Enthai Enthai Munthun Thirumagan PPT

