பல்லவி
என்னாலே ஜீவன் விடுத்தீரோ, – ஸ்வாமீ?
இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ?
அனுபல்லவி
பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே,
பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா,
பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை
மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? – என்
சரணங்கள்
1. கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம், – மெய்ப்பூங்
காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்,-வேர்த்து
வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம்,-யாரால்
விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்?
எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே;
எனால் உமக்கென்ன லாபம்? யேசு
மனா பரப்ரம திரு வுளமோ இது? – என்
2. சிலுவை மரத்தில் கைகால் நீட்டி, தேவரீர்
திருவிலாவைத் துளைக்க ஈட்டி, காயம்
வலிய அன்பின் கடைக்கண் காட்டி,-இன்னம்
வரவழைக்கிறீர் தயை பாராட்டி;
விலைகொடுத்தெனைக் கூட்டி, மிக்க சலாக்யம் சூட்டி,
மீண்டவாறிது மிக்க விசாலமே,
ஆண்டவா, அது பக்கிஷ நேசமே. – என்
Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ Lyrics in English
Pallavi ennaalae jeevan viduththeero, – svaamee? Iththanai paattukkingae aduththeero? Anupallavi ponnaattathipathi paraman aattukkuttiyae, poraுmaik kalavilaatha kirupaith thirukkumaaraa, poonndu por kurusinil araiyunndenai meenndanukraka mida neri konndatho? – en saranangal 1. Kallanaippol kattunnda parithaapam, – meyppoong kaavil aaththumaththutta manasthaapam,-vaerththu vellamaay raththam purannda sopam,-yaaraal vipariththu mutiyum un pirasthaapam? Ellaththanai anpilaa ullath thuroki naanae; enaal umakkenna laapam? Yaesu manaa paraprama thiru vulamo ithu? – en 2. Siluvai maraththil kaikaal neetti, thaevareer thiruvilaavaith thulaikka eetti, kaayam valiya anpin kataikkann kaatti,-innam varavalaikkireer thayai paaraatti; vilaikoduththenaik kootti, mikka salaakyam sootti, meenndavaarithu mikka visaalamae, aanndavaa, athu pakkisha naesamae. – en
PowerPoint Presentation Slides for the song Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ PPT
Ennalae Jeevan Vidutheero PPT

